தோசை சுட்டுத் தரவா?
அகரன்: அப்பா….
அப்பா: என்னப்பா!?!
அகரன்: ஒங்கக்கு தோச சுட்டு தரட்டுமா!?!
அப்பா: ம்… சரிப்பா.. சுட்டு கொண்டா…
(அகரன் தோசை கொண்டு வருகிறார்!)
அப்பா: வாவ்… எப்படிப்பா தோசை சுட்ட?!
அகரன்: அதுவா… அடுப்படி போனேனா…
அப்பா: ம்
அகரன்: அங்க தோசை ஊத்தி வெச்சுருந்தாங்களா…
அப்பா: ம்… அப்புறம்…
அகரன்: ஊத்தி பிளேட்ல வெச்சுருந்த தோசையை சுட்டுட்டேன்!.. சூடான தோசை சுட்டாச்சு
போங்க அல்லாம் ஆப்பியா இருங்க!!
பாவேந்தனின் பாதை!
பாவேந்தன்
சென்னை கொருக்குப் பேட்டை ஏ.எம்.பிரைமரி பள்ளியில் பயிலும் பாவேந்தன் -_ எனும் பெரியார் பிஞ்சிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தலையில் தேங்காய் உடைப்பது சரியா? என்று கேட்டதற்கு, தவறு என்று சொன்னான். சரி, உடைத்தால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு ரத்தம் _ வரும் என்று பதில் சொன்னான். சரி, இதையே எழுதிக் கொடு என்று கேட்டோம்.
-தலையில் நாம் தேங்காய் உடைத்தால் நமக்கு ஆபத்து ஏற்படும். நாம் கடவுளை நம்பிப் போகக் கூடாது. நாம் கடவுளை நம்பிப் போவதைவிட, தந்தை பெரியார் வழியில் போவதுதான் நமக்கு நல்லது. அப்படிப் போனால், நாம் தந்தை பெரியார் மாதிரியே ஆகலாம்.
இதைவிட வேறு எந்த லட்சியமும் வேண்டாம். என்று உடனே எழுதிக் கொடுத்து அசத்தினான். வியந்துபோன நான் அவனுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்தேன்.
– கருத்தோவியன், (பெரியார் பிஞ்சு வாசகன்)