மூடநம்பிக்கையின் முடைநாற்றம்
மயிலை நொச்சி நகர் பகுதியில் நான் வசிக்கிறேன். எங்கள் பகுதியில் பெரியபாளையத்தம்மன் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆடித் திருவிழா நடைபெறும். அதே நாளில் பிள்ளையார் பொம்மைகளைக் கடலில் கரைக்க வேண்டும்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெற்றால் அம்மனுக்குக் கூழ்வார்த்தல், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை இரண்டுமே கேழ்வரகால் செய்யப்படுவதால் மயிலை பகுதியில் தெய்வக் குத்தம் ஏற்பட்டுவிடுமாம்.
ஆகையினால் 9 திருநங்கைகளை அழைத்து வந்து அவர்களுக்கு மஞ்சள் புடவைகட்டி வரிசையாக நிற்க வைத்து கால்களைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து பாத பூஜை செய்து வணங்கினால் அந்த தெய்வக் குத்தம் நீங்கி விடும் என்று பூசாரி கூறியதன் அடிப்படையில், கடற்கரை ஓரமாகச் சென்ற திருநங்கைகளை அழைத்து வந்து சுமங்கலிப் பெண்கள் மூலமாக திருநங்கைகளின் கால்களைக் கழுவி மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார்கள்.
அச்சமயத்தில் மது அருந்திவிட்டு, பூசை செய்யும் பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்ததால் அருகிலிருந்த ஆண்கள் அவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். அது கலவரமாக மாறி போலீஸ் வந்தது. மூடநம்பிக்கையின் முடைநாற்றம் மோதலில் முடிந்தது.
– வி.யாழ்ஒளி,
ஏழாம் வகுப்பு, உ பிரிவு,
புனித இரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
சாந்தோம், சென்னை-04.
நீயும் எங்கே செல்லுவாய்?
எந்தன் அருமைப் பறவையே
என்ன வேண்டும் உனக்குத்தான்!
ஏதோ சொல்ல வருகிறாய்
எனக்கு ஒன்றும் புரியலை!
மரமும் வளரவில்லையே -_ இப்போ
வளர்ந்த மரமும் இல்லையே
நீயும் எங்கே செல்லுவாய்?
எங்களை விட்டுப் பிரிகிறாய்
எங்களுக்கு வருத்தம் தருகிறாய்.
– ச.கிஷோரி,
ஏழாம் வகுப்பு, மாண்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி,
பெருங்குடி, சென்னை-96.