சாய்கா ஆன்டெலோப்(Saiga Antelope)
கார்பாதியன் மலையடிவாரத்திலும், மங்கோலியாவிலும், யுரேசிய புல்வெளிகளிலும் அதிக அளவில் காணப்படும் விலங்கினமே சாய்கோ ஆன்டெலோப் ஆகும்.
வட அமெரிக்கப் பகுதிகளிலும், கிளையினங்கள் ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், கஜகஸ்தானின் மூன்று பகுதிகளிலும் காணப்படுகின்றன. மான்களைப் போன்ற நீண்ட கொம்புகளையும், மாடுகளைப் போன்ற காதுகளையும், நீண்ட வளைந்த மூக்கினையும் கொண்டுள்ள சாய்கா ஆன்டெலோப்கள் மானும் மாடும் கலந்த வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றுள்ளன.
கொம்புள்ள ஆண் இனம் பெண் இனத்தைவிடப் பெரியதாக உள்ளது. 36லிருந்து 63 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும் இவற்றின் வாழ்நாள் ஆறு முதல் பத்து ஆண்டுகள் ஆகும். கோடைக்காலத்தில் இடம்விட்டு இடம் செல்லக்கூடியன. வளைந்த மூக்கு தூசியினைத் தடுக்க உதவுகிறது.
இடம்விட்டு இடம் செல்லும்போது அதிக தூரம் செல்லக்கூடியன. ஆற்றில் அழகாக நீந்தும் திறன் பெற்றன. எனவே, புலம் பெயரும்போது ஆறு குறுக்கே வந்தால் எளிதில் நீந்திக் கடந்து செல்கின்றன.
ஆண் இனம் சண்டை போட்டு, சண்டையில் எந்த ஆண் சாய்கோ வெற்றி பெறுகிறதோ அது அய்ந்திலிருந்து அய்ம்பது வரையுள்ள குழுவிற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்கிறது.
1950ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் 20 லட்சமாக இருந்த எண்ணிக்கை சோவியத்தின் வீழ்ச்சியின் காரணமாகவும் வேட்டையாடலாலும் அதிக அளவில் குறைந்துவிட்டது. சீனர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் இதன் கொம்புகள் பயன்படுத்தப்படுவதும் எண்ணிக்கை குறைய மற்றுமொரு காரணமானது.
கிறிஸ்துமஸ் தாத்தா வண்டியில் வரும் மான் (Rein Deer) இதன் சந்ததிதான்.
கஜகஸ்தானில் 2010ஆம் ஆண்டு நவம்பரில் சாய்கா ஆண்டெலோப்களை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டதுடன் இந்தத் தடை 2021ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.