முதன் முதலில்
முதன் முதலில்
உலக மகளிர் தினம்: மார்ச் 8
- விண்வெளிக்குச் சென்ற முதல்பெண், முதன்முதலில் நடந்தவர் என்ற பெருமையினை ரஷ்யாவைச் சேர்ந்த வேலன் டினா விளாடி ரோவ்னா பெற்றுள்ளார். (1963 ஜூன் 16)
- உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா. (இலங்கை, 1960)
- அமெரிக்க நாவலாசிரியை மேரி ஹிக்கின்ஸ், நாவல் எழுத அதிக முன்தொகை பெற்ற பெண் ஆவர். (1988ஆம் ஆண்டு 4 நாவல் எழுத 22 கோடி ரூபாய்)
- இந்தியாவின் முதல் பெண் நீதிபதி அன்னாசாண்டி.
- உலகிலேயே முதன்முதலில் மருத்துவப் படிப்பு முடித்து டாக்டர் பட்டம் பெற்ற பெண் காரட் ஆண்டர்சன். தத்துவ மேதை பெட்ரண்ட் ரசல் பிறக்கும்போது அவரது தாய்க்கு மருத்துவம் பார்த்தவர்.
- ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில் கடந்த பெண் கெர்ட்ரூட் எடர்லி. பிரான்ஸ்_இங்கிலாந்து இடையே சாதனை செய்தார்.
- அமெரிக்கப் பெண் விமான ஓட்டி அமிலியா இயர்ஹர்ட் அட்லாண்டிக் கடல்மீது பறந்த முதல் பெண்மணி. (1928ஆம் ஆண்டு ஜூன் 17 கனடாவிலிருந்து பிரிட்டன் வரை சென்றார்.)
- 1983ஆம் ஆண்டு லண்டனில் 800 ஆண்டு வரலாற்றை உடைத்து முதல் பெண் மேயராக மேரி டோனல்ட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ரயில் எஞ்சினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் மும்பையைச் சேர்ந்த சுரேகா பான்ஸலே ஆவார்.