குரங்குகளை வேட்டையாடும் தங்கப் பூனை
விலங்குகள்
குரங்குகளை வேட்டையாடும் தங்கப் பூனை
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுள் பூனையும் ஒன்று. பூனையைப் பார்க்காதோர், அதனுடன் கொஞ்சி விளையாடாதோர் இருக்க முடியாது.
அரிய உயிரினமாகக் கருதப்படும் தங்கப் பூனை ஆப்பிரிக்காவின் உகாண்டாவில் உள்ள தேசியப் பூங்காவில் வசித்து வருகிறது. பூங்காவில் குரங்குகள் கூட்டமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனவாம். திடீரெனப் பாய்ந்து சென்ற தங்கப் பூனை, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகளை விரட்டி வேட்டையாடியுள்ளது.
மிரண்டு போன குரங்குகள் மரங்களில் ஏறித் தப்பிக்க முயற்சி செய்ய, பூனையும் மரங்களில் ஏறித் துரத்தியுள்ளது. காணொளியில் (வீடியோவில்) பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் தங்கப் பூனை வேட்டையாடும் இயல்புடையது என்று.
பன்றிகளின் வரவேற்பு
பன்றி என்ற பெயரைக் கேட்டதுமே பெரும்பாலானோர் அருவெறுப்படைவர். ஆனால், 700 தீவுகளைக் கொண்ட நாடான பஹாமாஸில் உள்ள சில தீவுகள் இயற்கை எழில் தவழ்வன. அதில் முக்கியமான தீவான கரீபியன் தீவு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் அழகினை உடையது.
இந்தச் சிறிய தீவில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. பளிங்கு போலக் காணப்படும் தெளிவான நீரில் 300 அடி தூரம் வரை சென்று நீச்சலடித்து விளையாடுகின்றன. சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து கொண்டு படகுகள் வரும்போது வேகமாக நீந்திச் சென்று, படகினைக் கரைக்கு அழைத்து வரும் வேலையினைச் செய்கின்றன.
பன்றிகள் நீச்சலடிப்பதைப் பார்த்து ரசித்துப் புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனராம் சுற்றுலாப் பயணிகள்.