புதிய விளையாட்டு – பெரியாரியலே நம் இலக்கு
பரமபதம் விளையாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். முந்தைய தலைமுறையில் பலர். விளையாடிய விளையாட்டு. இந்தத் தலைமுறையில் Snake ladder என்று விளையாடுகிறீர்கள்.
மூடநம்பிக்கைக் கருத்துகளைப் பரப்பும் விதத்தில் அமைந்த அந்த விளையாட்டுக்குப் பதிலாக சமூகக் கொடுமைகளிலிருந்து மீண்டு முன்னேறும் புதிய விளையாட்டை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். இந்த உயிரினங்கள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.
மற்றபடி அவை வெறுக்கப்பட வேண்டியவை அல்ல. ஆனால் ஜாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை போன்றவை இந்த உயிரினங்களைவிட மனிதசமூகத்துக்குப் பெரும் அழிவைத் தரக்கூடியன அல்லவா? அதிலிருந்து மீள்வதுதான் இந்த விளையாட்டு! அறிவியல் சிந்தனை, பகுத்தறிவு, பொதுவுடமை, பாலியல் சமத்துவம், சமூக நீதி ஆகியன சேர்ந்த சிந்தனைதான் பெரியாரியல். அதைச் சென்றடைவதுதான் நம் இலக்கு!
இந்த விளையாட்டை திராவிடர் திருநாள் விழா (18. 01.2015) அன்று பெரியார் திடலில் விளையாடி மகழும் தாய்மார்கள்.