புத்துலகின் தொலைநோக்காளர் – 5
பெரியார் சொன்னது:
பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு,
அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும்.
ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக்கூடும்.
இன்று பயன்பாட்டில்…
முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன் 1978 ஜூலை 25இல் பிறந்தார். இப்போது அவருக்கும் குழந்தைகள் இருக்கின்றன. எந்தப் பிரச்சினையுமின்றி வாழ்ந்து வருகின்றார்.
சோதனைக் குழாய் மூலம் குழந்தை உருவாக்கம் (Test Tube Baby) இன்று எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது.
நம் பெரியார் தாத்தா இந்தச் சிந்தனையை 1942லேயே வெளியிட்டிருந்தார் என்பது வியக்கத்தக்கதல்லவா?