உலக நாடுகள்
தலைநகரம்: போர்ட் ஆ பிரின்ஸ்
பரப்பளவு: 10,714 சதுர மைல்
மக்கள் தொகை: 9,996,731
அலுவலக மொழி: பிரெஞ்சு, ஹெய்டியன் கிரேயோல்
குடியரசுத் தலைவர்: மைக்கெல் மார்டெலி (Michel Martelly)
பிரதமர்: இவான்ஸ் பால் (Evans Paul)
நாணயம்: ஹெய்டின் கோர்டே (Haitian Gourde)
அமைவிடம்: க்யூபாவுக்கு அருகில் கரிபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்பானியோலா தீவின் மூன்றாவது பெரிய நாடு ஹெய்டி. இதன் வடக்கில் குவாயமோக் நதியும், வடமேற்கில் பெனிசுலா நதியும், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கில் மாசிப் டூ நார்ட் நதியும் பாய்கின்றன. கிழக்கில் டொமினிகன் குடியரசு அமைந்துள்ளது.
சிறப்புச் செய்தி: 17ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் நடைபெற்ற போர்க்களமாக இவ்விடம் அமைந்தது. 1804ஆம் ஆண்டு அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க மக்களின் புரட்சியின் காரணமாக பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஆப்பிரிக்க ஹெட்டி என்று பெயரிடப்பட்டது. இதுவே உலகில் மிகப் பழைய கருப்பினக் குடியரசு. 95 விழுக்காடு ஹெட்டிய குடிமக்கள் கருப்பின வம்சாவழிகள்.
1934இல் 19 வருடங்கள் அமெரிக்க ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் சுதந்திரம் பெற்றது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த ராணுவ ஆட்சி 1990இல் முடிவுக்கு வந்தது. இந்நாட்டில் நிலையற்ற அரசியல் இருந்தமையால் ஏழ்மைக்குள்ளானது. இந்த நாடு பத்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மூலதனங்கள்: பாக்சைட், செம்பு, கால்சியம் கார்பனைட், தங்கம், சலவைக்கல்.
விவசாய உற்பத்திகள்: காபி, மாம்பழம், கரும்பு, அரிசி, சோளம் மற்றும் கனிகள், காய்கறிகள்.