இன்னொரு கலாம் எப்போது?
இன்னொரு கலாம் எப்போது?
எப்படிப்பட்ட மாமனிதர் கலாம் அவர்கள்! அந்தோ! நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் அளவில் வளர்ந்து, தன்னிறைவு அடைய வேண்டும் என்று கருதியதோடு, கிராமங்களுக்கும் நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கான “PURA (Providing Urban Amenities to Rural Areas) என்ற செயல் திட்டத்தை அறிவித்த அறிவியல் மேதை.
தந்தை பெரியார் அதை 60 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார் என்பதை அறிந்ததும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து செயல்படுத்துகிறது என்றவுடன், பெரியார் புரா என்று பெயர் சூட்டிய தோடு, நமது பல்கலைக்கழகத்திற்கு 6 முறை வந்து சாதனைகளைக் கண்டுவியந்து ஊக்கப்படுத்திய வித்தகர் அவர்!
பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றும்கூட ஒதுங்காமல் கல்லூரிகளுக்கு வந்து இளைஞர்கள் -_- மாணவர்களது கல்வி, வாழ்க்கை முன்னேற்றத் திற்கென்று கடைசி மூச்சுள்ள வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்!
அவர் சுடர்விட்டு எரியும் கல்வி ஒளிவிளக்கின் திரியாக, என்றும் ஒளி தரும் உருவமாக நம் நெஞ்சில் நிறைந்துவிட்டவர்.
இன்னொரு கலாம் இனி எப்போது இந் நாட்டுக்குக் கிடைக்கப் போகிறார்? என்று மக்கள் தம் கண்ணீர்ப் பூக்கள் மூலம் நாம் அவருக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
-கி.வீரமணி, ஆசிரியர்