உலக நாடுகள் வரிசை
அமைவிடமும் இயற்கை அமைப்பும்:
¨ டொமினீக காமன்வெல்த் நாடு என்று அழைக்கப்படும் இந்நாடு கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடாகும்.
¨ பிரெஞ்சு தீவுகளான குவார்டனோப் தீவுகள் மற்றும் மார்டின்க்யூ தீவுகளுக்கு இடையில் தனித் தீவாக அமைந்துள்ளது.
¨ இதன் மொத்தப் பரப்பளவு 750 சதுர கிலோ மீட்டர்.
¨ நாட்டின் மிக உயரமான இடம் மொரின்.
¨ தலைநகரம் ரூசோவ்.
¨ டொமினீக தீவு பெருமளவு மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது.
¨ உலகின் இரண்டாவது பெரிய வெந்நீர் ஏரியைக் கொண்ட நாடு இது.
¨ இங்கு ஏராளமான அருவிகளும் நீரூற்றுகளும் ஆறுகளும் அமைந்து நாட்டின் இயற்கை அழகைக் கூட்டுகின்றன.
¨ மலைப்பாங்கான இத்தீவினை, லேயூ ஆற்றுச் சமவெளி இரண்டாகப் பிரிக்கிறது.
¨ இதன் காலநிலை கனமழைப் பொழிவுடன் கூடிய கதகதப்பான வெப்பமண்டல சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அருகில் உள்ள தீவுகளில் இல்லாத பல்வேறு விலங்குகள் இக்காடுகளில் உள்ளன.
¨ இந்நாட்டின் தேசியப் பறவையான சிஸ்ஸரவ் (ஷிவீssமீக்ஷீஷீu) கிளி இந்தத் தீவில் மட்டுமே காணப்படும் பறவையாகும். இந்நாட்டின் தேசியக் கொடியில் இந்தப் பறவை இடம் பெற்றுள்ளது.
மக்களும் மொழியும்:
¨ இந்நாட்டின் மக்கள் தொகை 2009 பொதுக் கணக்கெடுப்பின்படி 72,660 பேர். மக்கள் நெருக்கம் சதுர கிலோ மீட்டருக்கு 105 பேர்.
¨ இதன் பெரும்பான்மை மக்கள் ஆப்பிரிக்கர்களாகவோ அல்லது ஆப்பிரிக்க _அய்ரோப்பிய கலப்பினத்தினராகவோ உள்ளனர்.
¨ இதன் ஆட்சிமொழி ஆங்கிலம். மேலும் பிரெஞ்சு, படாய்ஸ் மொழிகளும் பேசப்படுகின்றன.
¨ இந்நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். அண்மையில் சில ஆண்டுகளாக புரோட்டஸ்டண்ட் மதப்பிரிவினர் அவர்களது தேவாலயங்களை அமைத்து வருகின்றனர்.
¨ மிகச் சிறிய அளவில் இஸ்லாமியர்களும் வசித்து வருகின்றனர். அண்மையில் ரோஸ் பல்கலைக்கழகம் அருகில் முதல் மசூதி கட்டப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியும் பொருளாதாரமும்
¨ இதன் நாணயம் கிழக்கு கரீபியன் டாலர்.
¨ நாட்டின் முக்கிய பொருளாதாரக் காரணி விவசாயம் சார்ந்தது.
¨ முக்கிய விளைபொருள் வாழைப்பழம். ஏனைய விளைபொருட்கள் காப்பி, மாங்காய் மற்றும் பப்பாளி போன்றவையாகும்.
¨ அண்மைக்காலமாக இந்நாடு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கான மய்யமாகி வருகிறது. குறிப்பாக வெளியில் இருந்து செயல்படும் வங்கிகள் இந்நாட்டில் ஏராளம் அமைந்துள்ளன.
¨ இதன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பணியில் சுற்றுலாத் துறை கைகொடுக்கிறது.
வரலாற்றுப் பார்வை
¨ அய்ரோப்பியர்களின் வருகைக்கு முன் கரீபியர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
¨ 1493 நவம்பரில் முதல் அய்ரோப்பியராக கிரிஸ்டோபர் கொலம்பஸ் போய்ச் சேர்ந்தார்.
¨ அதன்பின் சில ஆண்டுகள் கரீபியர்களிடமே இருந்த இந்நாடு 1632இல் பிரெஞ்சு காலனியாதிக்க நாடானது.
¨ 1783இல் பிரிட்டிஷ் இந்நாட்டிற்கு வந்து கடும் போராட்டத்திற்கிடையே 1805இல் தமது காலனி நாடாக்கியது.
¨ 1833இல் லீவர்ட் தீவுகளுடன் இணைந்து பின்னர் 194—-0இல் வின்வர்ட் தீவுகளுடன் இணைப்பாக்கம் செய்து கொண்டது.
¨ 1958 முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு அங்கமாக இருந்த இந்நாடு 1978 நவம்பர் 3இல் தனிநாடானது.
¨ 1979 மத்தியில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 1980இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் டொமினிக்கா சுதந்திர கட்சி வெற்றிபெற்று ஈஜினியா சார்லஸ் முதல் பெண் கரீபிய பிரதமராக பதவியேற்றார்.
அரசு முறை
¨ இந்நாடு 10 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அவை றிணீக்ஷீவீsலீமீs என அழைக்கப்படுகின்றன.
¨ இது ஒற்றையாட்சியைக் கொண்ட பாராளுமன்ற குடியரசு நாடாகும்.
¨ நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார். அரசாங்கத்தின் முழு அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சர் குழுவிடம் உள்ளது.
¨ தற்போதைய குடியரசுத் தலைவர் சார்லஸ் சாவரின்.
¨ தற்போதைய பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரீட்.
சுற்றுலா
¨ மோர்னி ட்ராயிஸ் பிட்டன்ஸ் தேசிய பூங்கா அய்.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் தொல்லியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
¨ இந்நாடு காலிபிஷி போன்று அழகிய கடற்கரைப் பகுதிகளை சிறந்த இயற்கை சுற்றுலாத் தளங்களாகக் கொண்டுள்ளது.
¨ இதன் கடலடி எரிமலைச் சுவடுகள் ஆழ்கடல் நீச்சல்காரர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.
¨ கேபிரிட் தேசியப் பூங்கா சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மய்யமாகும்.
முக்கிய ஊடகங்கள்
¨ இந்த நாட்டின் இரண்டு முக்கியச் செய்தித்தாள்கள் ‘The Sun’, ‘The Chronical’.
¨ இரண்டு தேசிய தொலைக்காட்சி நிலையங்களும், சில வானொலி நிலையங்களும் உள்ளன.