’சுவை’க்கும் ஓவியர்!
35 வயதான சீன ஓவியர் ஹானின் நாக்கு செய்த வேலை தான் நாம் காணும் ஓவியங்கள். தூரிகை (Brush) கொண்டு வரைவோம். சிலர் கைவிரல் கொண்டு, கால்விரல் கொண்டு, துணி கொண்டு, இன்ன பிறவற்றைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்ததை எல்லாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், இவரோ நாக்கைப் பயன்படுத்தி ஓவியம் வரைகிறார். கேரளாவிலும் கூட இப்படி நாக்கைப் பயன்படுத்தும் ஆனி என்ற ஓர் ஓவியர் இருக்கிறார். அவர் வேதி வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்.
நாக்கைப் பயன்படுத்தும்போது, நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வேதிப் பொருட்களாலான வண்ணங்களைப் (Acrylic Paints) பயன்படுத்தலாமா? அதனால், முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வண்ணங்களைத் தான் பயன்படுத்துகிறார் சீனாவின் ஹான்.
அதாவது உணவுப் பொருட்களினால் உருவாகும் வண்ணங்களைத் தான் அவர் பயன்படுத்துகிறார். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் சாறுகள் பல வண்ணங்களில் இருக்கின்றன அல்லவா? வரைவதற்கு அவற்றைப் பயன்படுத்தலாமே!
உணவுப் பொருட்களைப் பயன்படுத்தினால் சுவை காரணமாக நா ஊறாதா? என்று கேட்டால், வேண்டுமானால் சுவைத்துக் கொள்ள வேண்டியது தானே என்கிறார் ஹான். எனக்கும் கூட நா ஊறுகிறது… ஒரு ஓவியம் வரைந்துவிடவா?
– சமன்