உலக நாடுகள்
அமைவிடமும் இயற்கை அமைப்பும்:
¨ ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு முனையில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ள சிறிய நாடு. இதன் தலைநகர் ஜிபுட்டி நகரமாகும்.
¨ இந்நாட்டின் எல்லைகளாக எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளும் ஏடன் வளைகுடாவும் அமைந்துள்ளன.
¨ நாட்டின் மொத்த பரப்பளவு 23,200 சதுர கிலோ மீட்டர்கள்.
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨ இந்நாட்டின் பெரும்பகுதி நிலங்கள் உயர்ந்த பீடபூமிகளாக உள்ளன. இது இயற்கை அமைப்பு அடிப்படையில் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. வடக்கு மலைத்தொடர், தெற்கு மற்றும் மத்திய பகுதிகளான எரிமலை பீடபூமி பகுதிகள், கடற்கரை சமவெளிகள்.
¨ வடக்கு மலைப்பகுதி எட்டு மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த சிகரம் மவுசா அலி மலைத்தொடரில் எத்தியோப்பியா _ எரித்திரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
¨ நாட்டின் தென்பகுதி கிராண்ட் பாரா பாலைவனத்தால் அமைந்துள்ளது.
¨ இதன் காலநிலை உலக சராசரி வெப்பநிலையை விட குறைவாக உள்ளது.
¨ பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளன. கடற்கரைப் பகுதி மட்டும் இலேசான ஈரப் பதத்தைக் கொண்டுள்ளது.
¨ நாட்டின் மொத்தப்பரப்பில் 1 சதவீதத்திற்கு குறைவானதாகவே காடுகள் அமைந்துள்ளன.
வரலாற்றுத் தகவல்கள்:
¨ ஆஃபர்ஸ் இனத்தவரின் மூதாதையர்களான அராபியர்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டில் இங்கு குடியேறினர். பின்னர் சோமாலி இனத்தவர் வந்தனர்.
¨ கி.பி.825இல் மதப் பரப்பாளர்கள் மூலம் இஸ்லாம் வந்தது.
¨ 16ஆம் நூற்றாண்டு வரை அராபியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
¨ 1888இல் சோமாலிலாந்து என்ற பெயரில் பிரெஞ்சு காப்பாட்சி பகுதியானது.
¨ 1946இல் பிரெஞ்சின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
¨ 1977இல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது.
பொருளாதாரமும் மக்களும்:
¨ நாட்டின் மொத்த மக்கள் தொகை 8,10,178 பேர்
¨ பல இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
¨ இரண்டு பெரிய இனக் குழுக்கள் இவற்றில் முக்கியத்துவம் பெற்றவை. அவை சோமாலி மற்றும் ஆஃபார் ஆகும்.
¨ அராபிக் மொழியும், பிரஞ்ச் மொழியும் அலுவலக மொழிகள். இவைத்தவிர சோமாலிக் உள்ளிட்ட சில மொழிகளும் பேசப்படுகின்றன.
¨ நாட்டின் 94% மக்கள் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுகின்றனர். 6% மக்கள் கிருத்துவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.
¨ மொத்த மக்கள் தொகையில் 70% க்கு குறைவானவர்களே கல்வியறிவு பெற்றுள்ளனர்.
பொருளாதாரத் தகவல்கள்:
¨ ஜிபுட்டி நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சேவைத் துறையை சார்ந்துள்ளது. குறிப்பாக செங்கடலில் கடல்வழி போக்குவரத்து மூலம் நடைபெறும் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது.
¨ ஜிபுட்டி துறைமுகம் இதன் முக்கிய வணிக வருவாயை ஈட்டித் தருகிறது.
¨ இந் நாட்டில் மழையளவு மிகக் குறைவாக உள்ளதால் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் இறக்குமதி தவிர்க்க இயலாததாக உள்ளது.
¨ இதன் நாணயம் ஜிபுட்டியன் ஃபிராங் என்று அழைக்கப்படுகிறது.
¨ ஆப்பிரிக்காவின் அதிகம் உப்பு உற்பத்தி செய்யும் நாடு.
அரசு அமைப்பு முறை:
¨ நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் குடியரசுத் தலைவர் இருக்கிறார். அவர் தன்னால் நியமிக்கப்படும் பிரதம அமைச்சருடன் தமது அதிகாரங்களை பகிர்ந்து கொள்கிறார்.
¨ குடியரசுத் தலைவரின் தலைமையிலான கேபினட் அமைச்சர் குழு சட்டமன்றத்திற்கு கட்டுப்பட்டதாகும்.
¨ நாட்டின் நீதிமுறைகள் கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற படிநிலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
¨ பிரெஞ்சு சிவில் சட்டம், ஷாரியா எனப்படும் இஸ்லாமிய சட்டம் மற்றும் ஜுர் எனப்படும் சோமாலி ஆஃபார் மக்கள் சட்டம் ஆகியவை அமலில் உள்ளன.
¨ தற்போதைய குடியரசுத் தலைவர் இஸ்மாயில் உமர் கலில்லா. பிரதம அமைச்சர் அப்துல் காமில் முகமது.