பிஞ்சு மடல்
நான் ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஜனவரி 2016 முதல் பெரியார் பிஞ்சு புத்தகம் முழுமையாக வண்ணப் பக்கங்களுடன் கூடிய இதழாக மலர்ந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வாழ்த்துக்கள்.
– தெ.பி.கௌதம் பிரபு, சி.கொண்டல்பட்டி
‘கொட்டிய மழை! துளிர்த்த மனித நேயம்! பிஞ்சுகளின் சமூக அக்கறை’ என்ற கட்டுரையைப் படித்தேன். என்னைப் போன்ற பிஞ்சுகள் இணைந்து கண்காட்சி நடத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன்.
எங்களால் முடிந்தவரை பிறருக்கும் உதவ முடியும் என்பதை நினைக்கையில் நான் மிகுந்த வியப்பும், மகிழ்வும் அடைகிறேன். என்னால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை எண்ணும்போது மிகவும் வருத்தம். எனினும் என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
– இரா.செந்தழல், பூவிருந்தவல்லி
2016-ஆம் ஆண்டின் நாள்காட்டி நான் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்ததற்கு மகிழ்ச்சி. அனைத்து கட்டுரைகளிலும் கார்ட்டூன் கொண்டு வடிவமைத்திருந்தது சிறப்பு. பெரியார் பிஞ்சு புத்தகத்தில் அறிவுசார்ந்த செய்திகளையும், வரலாற்றுச் செய்திகளையும் தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
நான் தொடர்ந்து படிப்பது மட்டுமின்றி, என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்வேன். நன்றி!
– சு.பெ.தமிழிசை, இராமநாதபுரம்
எனக்கும் என் தம்பி அகரனுக்கும் பெரியார் பிஞசு புத்தகத்தில் வரும் எல்லா பயிற்சிகளும் பிடிக்கும். நான் அதை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டேன். என் அம்மா, அப்பா திட்டடினாலம் கூட அதை முடித்துவிட்டுத் தான் வீட்டுப்பாடங்களைக்கூட முடிப்பேன். அசத்தல் அகரன், தங்கத் தாத்தா வாழ்க்கையிலே, சுடோகு, பெரியார் பிஞ்சுத் திரை, குழந்தைகள் நாடகம், சரைந்து பழகுவோம் இவையெல்லாம் தொடர்ந்து பெரியார் பிஞ்சு இதழில் இடம்பெற வேண்டும்.
– இ.ச.மணிமொழி, மத்தூர்