உலக நாடுகள்
அமைவிடமும் எல்லைகளும்:
¨ கம்போடியா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்தோ சீனா தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
¨ இதன் வடமேற்குப் பகுதியில் தாய்லாந்தும், கிழக்குப் பகுதியில் வியட்நாமும், லாவோஸ் நாடும் தென்மேற்குப் பகுதியில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன.
¨ இதன் மொத்தப் பரப்பளவு 1,81,035 சதுர கிலோ மீட்டர். (பரப்பளவு அடிப்படையில் உலகில் 88ஆம் இடத்தை வகிக்கிறது.
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨ இதன் பெரும்பகுதி மேகொஸ் ஆற்று வடிகால் பகுதிகள் மற்றும் பாசாக் ஆற்றுச் சமவெளிப் பகுதிகளாக அமைந்துள்ளன. (குறிப்பாக மத்தியப் பகுதி)
¨ இதன் வடக்கு எல்லையில் டான்கிரெக் மலை அமைந்துள்ளது.
¨ சமவெளிப் பகுதியில் பெரும்பகுதி விவசாயம் மெகாங்க் ஆற்றின் டெல்டா பகுதியில் நடைபெறுகிறது.
¨ இந்நாட்டின் முக்கிய ஏரி டன்லே சபீ; இது டெகாங்க் டெல்டா பகுதியில் அமைந்துள்ளது.
¨ காடுகள் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளாகும்.
¨ கணிசமான அளவு மாங்குரோவ் காடுகளும் உள்ளன.
¨ கம்போடியா பல்வேறு வித்தியாசமான தாவரங்களையும் விலங்குகளையும் கொண்ட சிறந்த சூழலியலைக் கொண்ட நாடு.
¨ இங்கு 212 வகை பாலூட்டிகளும், 536 பறவை வகைகளும் 240 ஊர்வன உயிரினங்களும், 850 நன்னீர் மீன் வகைகளும் (டோன்லே சாப் ஏரிப்பகுதிகளில்). 435 கடல்வாழ் உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
¨ நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு முக்கியத்துவம் பெற்றதாகும்
¨ இது தவிர ஏராளமான விலங்குகள் புகலிடங்கள் அமைந்துள்ளன.
மக்களும் மொழியும்:
¨ நாட்டின் மொத்த மக்கள் தொகை 1,54,58,332 பேர்.
¨ மக்கள் நெருக்கம் சதுர கிலோ மீட்டருக்கு 82.8 பேர் வகிக்கின்றனர்.
¨ நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.7%
¨ நாட்டின் மக்கள் தொகையில் 50% பேர் 22 வயதுக்குக் குறைவானவர்கள்.
¨ நாட்டின் அலுவலக மொழி கெமர் மொழி. இம்மொழியே 95 விழுக்காடு மக்களால் பேசப்படுகிறது. வியட்நாம், சீனமொழி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளும் பேசப்படுகின்றன.
¨ நாட்டின் 95% பேர் கொவாடா புத்த மதத்தைச் சார்ந்தவர்கள்.
¨ 2008 கணக்கெடுப்புப்படி 77.6% பேர் கல்வியறிவுப் பெற்றுள்ளனர்.
பொருளாதாரம்:
¨ நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மையைச் சார்ந்துள்ளது.
¨ முக்கிய விளைபொருட்கள் நெல், மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு, வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, வேர்கடலை, சோயாபீன்ஸ், எள் மற்றும் இரப்பர் போன்றவைகளாகும்.
¨ அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அரிசி, மீன், மரம், துணிகள் மற்றும் இரப்பர் போன்றவையாகும்.
¨ அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்கள் பெட்ரோலியப் பொருட்கள், தங்கம், கட்டுமானப் பொருட்கள், எந்திர தளவாடங்கள், கனரக வாகனங்கள் போன்றவையாகும்.
¨ இங்கு கிடைக்கும் இயற்கை கனிமங்கள் இரும்புத்தாது, மாங்கனிஸ், பாஸ்பேட், ஜெம்ஸ்டோன் போன்றவையாகும்.
¨ நாணயம் ரியல்.
அரசு முறைகள்:
¨ இதன் தலைநகர் புனோம்பென் நகரமாகும்.
¨ மன்னராட்சியின் கீழ் பல கட்சி ஜனநாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசமைப்பை உடையது.
¨ நாட்டின் தலைவராக மன்னர் விளங்குகிறார்.
¨ தற்போதைய மன்னர் நரோடாம் சிகாமணி
¨ அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் விளங்குகிறார். தற்போதைய பிரதமர் குன்சென்
வரலாற்றுச் சுவடுகள்:
¨ கி.பி.7ஆம் நூற்றாண்டு வரை இந்து மதமும் புத்த மதமும் இருந்தன.
¨ கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் கெமர் இனத்தவரின் ஆதிக்கம் பரவத் தொடங்கியது. இரண்டாம் ஜெயவர்மன் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் காலத்தில் நாடு மிகவும் செழிப்படைந்தது.
¨ 13ஆம் நூற்றாண்டில் புத்த மதம் வலுவானது. இதனால் இதன் எழுத்து முறை சமஸ்கிருதத்திலிருந்து பாலிக்கு மாற்றப்பட்டது.
¨ 1863இல் ஃபிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாக மாறியது.
¨ 1953 நவம்பர் 9ஆம் தேதி பிரான்சிடமிருந்து விடுதலைப் பெற்றது.
¨ 1970இல் கெமர் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.