• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 32

2016_mar_pinju21
மார்ச்

எல்ரிக்ஸ்

நாம் படங்களில் பார்ப்பது போல் கோடிக்கணக்கான விண்மீன்கள் அடங்கிய  ஒரு அழகிய மின்னிடும் சுருள்வடிவ பால்வெளியைப் போன்று பல உள்ளன. ஆனால் சமீபத்தில் வானியல் அறிஞர்கள் ஒரு புதிய பால்வெளியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பால்வெளிமண்டலம் 30 ஆயிரம் கோடி சூரியன்கள் ஒன்றாக சேர்ந்தால் எப்படி ஒளிருமோ அதே போல் இந்தப் பால்வெளிமண்டலத்தின் ஒளி மிகவும் திகைப்பூட்டுவதாக உள்ளது. இது போன்ற பால்வெளிமண்டலம் இதுவரை கண்டறியாத ஒன்று ஆகும், ஆகவே இதை ஃப்ராடெட் பால்வெளி என்று பெயர் வைத்துள்ளனர். இனி இது போன்ற ஒளிமயமான பால்வெளிமண்டலங்கள் கண்டு-பிடிக்கப்படும் போது ஃப்ராடெட் வரிசையில் பெயர் சூட்டப்படும், இதன் தனிப்பெயர் எல்ரிக்ஸ்  ஆகும். இதன் அடையாளப் பெயர் CR7 ஆகும்.

நமது பால்வெளிமண்டலத்தைப் போலவே இதன் மய்யத்திலும் மிகபெரிய கருந்துளை உள்ளது. இந்தக் கருந்துளையிலிருந்து சக்திவாய்ந்த கதிர்கள் வெளிப்பட்டு கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் அடர்த்தி மிகுந்த புற ஊதா மற்றும் எக்ஸ்ரே கதிர்களைக் கொண்ட மேகங்களை உருவாக்குகிறது,

இந்த மேகங்கள் அடர்த்தி மிக்கவைகளாக மாறும் போது அதீத வெப்பமடைந்து ஒளியை உமிழ ஆரம்பிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

நமது பால்வெளிமண்டலமும் ஆரம்ப காலத்தில் இது போன்றே ஒளிர்ந்திருக்கவேண்டும். அதன் பிறகு இந்த ஒளிர்மேகங்கள் கரைந்து அதிலிருந்து விண்மீன்களும் இதன் வான்வெளி பொருள்களும் தோன்றுகின்றன.

இந்தப் பால்வெளிமண்டல ஒளியானது 1300 கோடி ஒளி ஆண்டுகள் பயணம் செய்து நம்மை வந்தடைந்துள்ளது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும், கலிஃபோர்னியா பல்கலைக்-கழகமும் இணைந்து W.M. Keck என்ற பெயர்கொண்ட வானியல் ஆய்வு மையத்தில் உள்ள 10 மீட்டர் விட்டம் கொண்ட தொலைநோக்கி மூலம் இந்த பால்வெளிமண்டலத்தைக் கண்டறிந்து  பூமியில் இருந்து இதன் தூரத்தையும் துல்லியமாக கண்டறிந்துள்ளனர்.

அனைத்து பால்வெளிமண்டலங்களும் நமது பால்வெளி போன்ற வடிவத்தில் இருப்பதில்லை. இதுவரை நான்கு வடிவம் கொண்ட பால்வெளி-மண்டலங்களை நாம் கண்டறிந்துள்-ளோம். அவை சுருள்வடிவம் (spiral Galaxies),
லெண்டிகுலர் (Lenticular Galaxies), நீள்வடிவம் (Elliptical Galaxies), ஒழுங்கற்ற வடிவம் (Irregular Galaxies).

புதிதாக உருவாகும் பால்வெளிமண்டலங்கள் கோடை காலத்தில் வெற்று வானில் ஆங்காங்கே தெரியும் தெளிவான உருவமற்ற வெள்ளை மேகம் போலத் தோற்றமளிக்கும், பல ஆயிரம் கோடி ஆண்டுகளில் நமது பால்வெளிமண்டலம் போன்று சுருள்வடிவத்தை அடைகிறது,

அருகில் எந்த ஒரு பால்வெளிமண்டலமும் இல்லாத பட்சத்தில் நீண்ட ஜெட்விமானத்தின் வால் போல் நீண்ட வடிவத்தில் காணப்படுகிறது, பெருவெளியில் இதன் வேகமான பயணத்தின் மூலம் தானாகவே மெல்ல மெல்ல சுருள் வடிவத்தை அடைகிறது, இரு கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதும், இணைவதும் உண்டு.

நமது இல்லம் என்ற பால்வெளிமண்டலம் மற்றும் ஆண்டிரோமீடா பற்றி அறிந்துகொண்டோம். பால்வெளி மண்டலம் ஒன்றல்ல இரண்டல்ல எண்ணிக்கையிலடங்காத பால்வெளி-மண்டலங்கள் உள்ளன. பால்வெளி மண்டலங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் காண்போம்

பால்வெளி மண்டலங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கு உங்கள் வீட்டு சமையலறையிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது, அடுப்பில் பால் ஊற்றி சூடவைப்பார்கள், அது நன்றாக கொதித்து வரும் இது பொதுவாக நாம் பார்ப்பது.

சில நேரங்களில் பழைய பாலாக இருந்தால் அதை சூடுபடுத்தும் போது திரண்டு விடுகிறது. இதே உதாரணம் தான் பால்வெளிமண்டலத்தில் தோற்றதிலும் உள்ளது.  மிக அதிகச் சூடான வாயூக்கள் குறிப்பிட்ட அளவு வெப்பநிலைக்கு மாறிய திரள ஆரம்பிக்கின்றன.

நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு இதன் பிரமாண்டமான அளவு விரிவடைந்து தங்களுக்குள் திரள ஆரம்பிக்கிறது, அப்போது ஒரே குணமுடைய வாயு மூலக்கூறுகள் தங்களுக்கு என்று ஒரு பால்வெளிமண்டலத்தை உருவாக்கிக்-கொள்கிறது. இப்படி உருவான பால்வெளி-மண்டலங்கள் ஈர்ப்பு விசை மற்றும் நமது பெருவெளி விரிவ்டைதல் காரணமாக ஒன்றை ஒன்று விலகி நீண்ட தூரம் சென்று இறுதியில் நமது பால்வெளிமண்டலம் போல் மாறுகிறது.

இப்படி உருவான கோடிக்கணக்கான  பால்வெளி மண்டலங்களில் எண்ணற்ற விண்மீன்கள், அடர்வாயு மேகங்கள், கருமை-பொருட்கள் (Dark Matter) போன்றவை உள்ளன.  விண்மீன்களும் இதர விண்-பொருட்களும், கருமைப் பொருட்களின் ஈர்ப்பாற்றலால் ஒன்றை ஒன்று  பின்னிக் கொண்டிருக்கின்றன.

பிரபஞ்ச ரகசியத்தின் முந்தையத் தொடர்களில் விண்மீன் கொத்துக்கள் குறித்து படித்திருப்பீர்கள், அதில் நமது பால்வெளியில் உள்ள விண்மீன் கொத்துகளை அறிந்திருந்தோம். எடுத்துக்காட்டாக நமது கார்த்திகை விண்மீன் மண்டலம் கூட ஒரு விண்மீன் கொத்துதான். அங்கு விண்மீன்கள் நெருக்கமாக அடத்தியுடன் காணப்படும். அடுத்து நாம் பார்க்கப்போவது பால்வெளிமண்டலங்கள் அடத்தியாக காணப்படும் விர்கோ மண்டலம். அதாவது தமிழில் கன்னிராசி விண்மீன் மண்டலமாகும்.

17
ஒன்று போல் இருக்கும் இரண்டு?ஒன்று போல் இருக்கும் இரண்டு?3rd March 2016
என்னம்மா...பாட்டிம்மா.. இப்படி பண்றீங்களேம்மா...3rd March 2016என்னம்மா...பாட்டிம்மா.. இப்படி பண்றீங்களேம்மா...

மற்ற படைப்புகள்

2016_mar_pinju2
மார்ச்
2nd March 2016 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More
2016_mar_pinju8
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

’ஒரே ஒரு ஊர்ல…’

Read More
2016_mar_pinju48
மார்ச்
2nd March 2016 by ஆசிரியர்

பெரியார் பெயர்த்திகள்!

Read More
2016_mar_pinju36
மார்ச்
2nd March 2016 by ஆசிரியர்

எனக்குப் பிடித்த பெண்

Read More
2016_mar_pinju21
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 32

Read More
2016_mar_pinju16
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p