’ஒரே ஒரு ஊர்ல…’
பெரியார் பிஞ்சு இதழும் பர்ஸ்ட் ஸ்டெப் நிறுவனமும் இணைந்து நடத்திய பெரியார் திடலில் நடத்திய “ஒரே ஒரு ஊர்ல…” கதை சொல்லும் நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர் ஏராளமான பிஞ்சுகள். தங்கள் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தனர்.
காவேரி மாணிக்கம், வெற்றிச் செல்வன், விஜயலட்சுமி, சரவணன், மலர்விழி ஆகியோர் ஏராளமான குழந்தைக் கதைகளை பிஞ்சுகளுக்குச் சொல்ல, மகிழ்வுடன் கேட்டு மகிழ்ந்தனர் அனைவரும். ஒரு பெரிய துணியில் தங்கள் கரங்களை வண்ணத்தில் பதிவு செய்து கொண்டாடினர்.
ரசிக்கத்தக்க புதிய, பழைய விளையாட்டுகளை இனியன் அண்ணாவுடன் சேர்ந்து விளையாடினர். ஒவ்வொரு மாதமும் ‘ஒரே ஒரு ஊர்ல’ இனி பெரியார் திடலில் நடக்கும்.
உங்கள் ஊரிலும் நடத்த வேண்டுமா? நாங்கள் தயார்! அப்புறம் என்ன? எந்த ஊர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தயாராக இருக்கிறதோ, அவர்களுக்கு முதல் வாய்ப்பு!
-பிஞ்சண்ணா