நான் ரொம்ப பிஸி! வண்ணப் பென்சில் பேசுகிறது
பிஞ்சுகளே! நான் தான் வண்ணப் பென்சில் பேசுகிறேன். நீங்கள் மட்டுமே பெரும்பாலும் என்னை பயன்படுத்தி வந்த நிலை மாறி, இன்று உலக அளவில் பெரியவர்களும் அவர்களின் பணிச் சுமை நீங்க, ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கிற்கு வண்ணம் தீட்டும் புத்தகம் வாங்கி எங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் உலக அளவில் எங்கள் எண்ணிக்கை போதாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் போக்க உலகின் மிக பெரிய பென்சில் உற்பத்தி தொழிற்சாலையான பேபர் கேஸில் நிறுவனம் கூடுதல் மாற்றங்களுடன் எங்களைப் போன்ற மேலும் பலரை உருவாக்கி வருகிறது.
பொதுவாக மக்களுக்கு 36 வண்ணங்களில் நாங்கள் இருப்பது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக வண்ணங்களில் வேண்டு-மென்பதால் 72 மற்றும் 120 வண்ணங்களிலும் உடைய பொதிகளைத் தயாரித்துவருகிறது.
கடந்த ஒரு ஆண்டில் வண்ணம் தீட்டும் புத்தகங்களின் விற்பனையும் 300 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ம்ம்… உங்கள் பெற்றோரே உங்களுக்கு போட்டியாக வருவதற்குள், பக்கத்தில் இருப்பதைப் போன்றே படம் வரைந்து வண்ணம் தீட்டிப் பாருங்கள்.-
– தமிழ்ச்செல்வி