பிரபஞ்ச ரகசியம்-33
விர்கோ விண்மீன் மண்டலத்தில் உள்ள பால்வெளிமண்டலங்களை விர்கோ கொத்து விண்மீன் மண்டலம் (Virgo Cluster) என்று பெயர் சூட்டியுள்ளனர். விர்கோ விண்மீன் மண்டலங்களில் உள்ளவை விண்டிமியாட்டிரிக்ஸ், மினிலவ்வா, அரின், ஸவிஜாவா, ஸ்பைகா மற்றும் உமிகிரான் வெர்ஜினியஸ் விண்மீன்கள் அமைந்த மேற்புறப் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட பால்வெளி மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மையம் புவியிடமிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இதில் உள்ள பால்வெளி மண்டலங்கள் ஒன்றை ஒன்று விணாடிக்கு 1200 கிலோமீட்டர் வேகத்தில் விலகிச் செல்கின்றன. இவற்றிலுள்ள மிகப் பிரகாசமான பால்வெளி மண்டலத்தைக் கூட நாம் சாதாரணமான தொலை நோக்கியால் பார்க்க இயலாது. இவற்றில் இரண்டாயிரம் பால்வெளிமண்டலங்களும் பெரும்பாலானவை மிகப் பெரியவை. விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்களின் மையத்தில் M .84(NGC 4374), M.86(NGC 4406), M.87(NGC 4486) என்று பதிவு செய்யப்பட்ட, நீள்கோள் வடிவ மாபெரும் அண்டங்கள் உள்ளன.
விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள் பேரண்டத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் பொருண்மை ஒரு பக்கம் அதிகமாகச் செரிவுற்றிருப்பதால் நமது அண்டத்திலுள்ள துணை அண்டங்கள் யாவும் இதன் வலிமையான ஈர்ப்பினால் கவரப்படுகின்றன. இதை ‘விர்கோவின் உறிஞ்சுதல்’ என்பர்.
விர்கோ விண்மீன் மண்டலம்
லிப்ரா விண்மீன் மண்டலத்தின் கிழக்கே ஒளிமிகுந்த ஒரு விண்மீன் தென்படும், இதைத் தமிழில் சித்திரை விண்மீன் என்று கூறுவர், ஆங்கிலத்தில் ஸ்பைகா என்று அழைப்பார்கள். இந்த விண்மீனுக்கு அருகில் முழு நிலவு வரும் போது சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த விண்மீனில் ஒளிரும் அளவை பொலிவென் 0.98 என்று அளவிட்டுள்ளனர். இது நமது பூமியில் இருந்து 260 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஜனவரி இறுதிவாரம் முதல் மார்ச் வரை இந்த விண்மீன் மண்டலம் நமது பார்வைக்கு நன்கு தெரியும்.
இந்த விண்மீன் மண்டலம் பால்வெளி மண்டலத்தின் ஜன்னல் என்றும் அழைக்கப்படும்,
விண்மீன்கள் இல்லாத பால்வெளிமண்டலம்
இப்பெருவெளியில் பால்வெளிமண்டலம் என்றாலே அது ஆயிரக்கணக்கான விண்மீன்களைக் கொண்டது என்றுதான் பொருள். இந்த நிலையில் வானியல் ஆய்வாளர்கள் விண்மீன்களே இல்லாத பால்வெளி மண்டலத்தை கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஆரம்பக்கட்ட பால்வெளி மண்டலங்களுள் ஒன்றான பெயரிடப்படாத இந்த பல்வெளி மண்டலத்தில் ஹைட்ரஜன் மட்டுமே உள்ளது. .அதாவது சுமார் கோடிக்கணக்கான விண்மீன்களை இந்த ஹைட்ரஜன் உருவாக்கிவிடும்.
தற்போது இந்த அடர்த்தியான வெப்ப வாயுக்களை சிதறடிக்க வலுவான கருமைப் பொருள் இல்லாத காரணத்தால், இதுவரை இங்கு விண்மீன்கள் உருவாகவில்லை, இருப்பினும் இன்னும் சில மில்லியன் ஆண்டுகளுக்குள் இங்கு பல விண்மீன்கள் உருவாகிவிடும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்த தொடரில் கோள்களில் உள்ள வளிமண்டலங்கள் பற்றி காணலாம்.