உலக நாடுகள் அய்வரி கோஸ்ட்
அமைவிடமும் எல்லைகளும்:
¨ ‘கோட்-_டி_-அய்வரி’ அல்லது கோட்_டி_வார் என்று பிரெஞ்சு மொழியில் தற்போது அழைக்கப்படும் அய்வரி கோஸ்ட் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான கினியா வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.
¨ இதன் அண்டை நாடுகளாக லிபிரியா, கினியா, மாலி, புர்கினாபாசோ, கானா முதலிய நாடுகள் அமைந்துள்ளன.
¨ இது ஏறத்தாழ சதுர வடிவில் அமைந்துள்ளது.
¨ இதன் மொத்த பரப்பளவு 78,699 சதுர கிலோ மீட்டர்கள்.
¨ இதன் கடல் எல்லை 590 கிலோ மீட்டர்.
மக்களும் சமூகவியலும்:
¨ நாட்டின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 19,000 பேர்.
¨ இவர்களில் 40.2% இஸ்லாமியர்களாகவும், 19% பேர் கத்தோலிக்கர்களாகவும், 19.3% இவாங்சிலிக்கல், 12.8% பேர் மதம் சாராதவர்களாகவும் உள்ளனர். ஏனையோர் பிற மதங்களைப் பின்பற்றுகின்றனர்.
¨ நாட்டின் அலுவலக மொழியாக பிரெஞ்சு உள்ளது. 60க்கும் மேற்பட்ட வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨ இந்நாட்டின் நிலப்பரப்பு பரந்து விரிந்துள்ள பீடபூமிபோல் அமைந்துள்ளது.
¨ கடல் மட்டத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து இதன் வடப்பகுதி 500 மீட்டர் உயரத்தில் சாய்வாக உள்ளது.
¨ இது வெப்பமண்டலக் காடு வகையினைச் சார்ந்தவையாகும்.
¨ உயர்ந்த சிகரம் மவுண்ட் நிம்பா.
¨ நீளமான ஆறு பண்டமா ஆறு. மேலும், காவல்லா, சசந்திரா போன்றவை நாட்டின் முக்கிய ஆறுகளாக இருந்து நாட்டை வளப்படுத்துகின்றன.
¨ அகலமான ஏரி கோசவ் ஏரி.
¨ இதன் காலநிலை முழுதும் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டதாகும்.
¨ வனவியல் அடிப்படையில் இது நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை குறுகிய கடலோரப் பகுதி, மேற்கே அமைந்துள்ள மழைக்காடுகள், கிழக்கே அமைந்துள்ள வனப்பகுதி, வடக்கே அமைந்துள்ள சவானா புல்வெளி பகுதிகள்.
¨ மிதமான வெப்பத்தையும், வறட்சியையும் கொண்டதாகும்.
பொருளாதாரமும் வளர்ச்சி நிலையும்:
¨ நாணயம் சி.எஃப்.ஏ பிராங்க்.
¨ இதன் பொருளாதாரம் பெரும்பகுதி விவசாயத்தைச் சார்ந்துள்ளது. 64.8% நிலப்பகுதி வேளாண் நிலங்களில் 50% மேலானோர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
¨ கோகோ, காப்பி, வாழை, பருத்தி, இரப்பர், பைனாப்பிள் போன்றவை முக்கிய வேளாண் விளைபொருட்கள் ஆகும்.
¨ இங்குதான் உலகிலேயே ‘கோகோ’ அதிகம் விளைகிறது. காப்பி உற்பத்தியிலும் இது முக்கிய நாடாகும்.
¨ வைரம், பெட்ரோலியம், இயற்கை வாயுக்கள், மாங்கனீஸ், இரும்புத்தாது, தாமிரம், தங்கம், நிக்கல் இங்கு கிடைக்கும் முக்கிய இயற்கை தாதுக்கள் ஆகும்.
¨ பைனாப்பிள், காப்பி, வாழைப்பழம், பருத்தி, பெட்ரோல், ரப்பர், பாமாயில் ஆகியவை பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
¨ முக்கிய இறக்குமதி பொருட்கள்: உணவுப் பொருட்கள், எரிபொருள், மூலதன தளவாடப் பொருட்கள்.
¨ கால்நடை வளர்ப்பும், மீன் பிடித் தொழிலும் முக்கிய பொருளாதாரக் காரணிகளாக விளங்குகின்றன.
வரலாற்றுக் குறிப்புகள்:
¨ 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்ரோப்பியர் தந்தம் மற்றும் அடிமைகள் வாணிபத்திற்காக வந்தனர்.
¨ 19ஆம் நூற்£ண்டில் பிரெஞ்சு ஆதிக்கம் அறிமுகமானது.
¨ 1893இல் தொடங்கி 1918இல் முழுமையாக பிரான்ஸ் கட்டுப்பாட்டில் வந்தது.
¨ 1946இல் இதன் வடக்குப் பகுதி தனியாக பிரிந்து அப்பர் வோல்டா என்ற தனி நாடானது.
¨ 1958இல் அமைதியான முறையில் தன்னாட்சியைப் பெற்றது.
¨ ஆகஸ்ட் 7, 1960இல் முழு சுதந்திரம் பெற்றது.
¨ 1985இல் நாட்டின் பெயர் கோட்_டி_வார் என்று மாற்றப்பட்டது.
அரசமைப்பு முறை:
¨ சட்டப்படி இதன் தலைநகர் யமோஸ்ஸோக்ரா. ஆனால், நடைமுறையில் அபிட்ஜான் நகரமே தொழில் மற்றும் நிர்வாக தலைநகராகும்.
¨ பல கட்சி குடியரசு நாடாகும்.
¨ நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார். அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
¨ அரசாங்கத்தின் தலைவர் பிரதம அமைச்சராக இருக்கிறார்.
காடுகள்:
¨ நாட்டின் நிலப்பரப்பில் 32% இடங்கள் காடுகளாக உள்ளன.
¨ இது அவர்களின் மரத்தொழில் சார்ந்த பொருளாதாரத்தை உயர்த்துகிறது.
நாட்டின் முக்கிய சின்னங்கள்:
¨ நாட்டின் தேசிய விலங்கு ஆப்பிரிக்க யானை.
¨ நாட்டின் தேசியப் பறவை வெள்ளை தாடைகளையுடைய டெராகோ பறவை-. <