புத்தகச் சங்கமம்! புத்தாக்கச் சங்கமம்!

சென்னை புத்தகச் சங்கமத்தின் ஏற்பாட்டில் 50% விலையில் சிறப்பு புத்தகக் காட்சி கடந்த ஏப்ரல் 22 முதல் 24 வரை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு நாளும் காலை குழந்தைகளுக்கான சிறப்பு புத்தாக்க வகுப்புகள் நடைபெற்றன. ஓவியம், கைவினை, கதைசொல்லுதல், எளிய அறிவியல் ஆகியவற்றை மு.கலைவாணன், இனியன், சரவணன், அறிவரசன், செந்தமிழ் சேகுவேரா, குணசேகரன், அறிவியலாளர் சித்து முருகானந்தம் ஆகியோர் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கினர். மூன்றுநாளும் ஆட்டம், கொண்டாட்டத்துடன் குதூகலமாக தங்கள் விடுமுறையைத் தொடங்கினர் பிஞ்சுகள்!