பகிர்ந்து உண்ணுங்கள்
ஏழைக் குடும்பங்களில் பெற்றவர்கள் தாங்கள் பட்டினி கிடந்தாலும் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் இந்த நிலைமை குழந்தைகள் பெரியவர்களான பின்பும்கூட குழந்தைகள் தொடர்ந்து கொண்டு இருந்தது.
தங்களுக்கென்று சமைத்து வைத்துள்ளதையும், பெற்றவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்றுகூட கவலைப்படுவதில்லை. வீட்டு-வேலை செய்கிற இடத்தில் இருந்தால் அன்று சாப்பிடுவார்; இல்லையென்றால் பட்டினிதான்.
இப்படி தங்களைப்பற்றி கவலைப்படாமல் தன் குழந்தைகள் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற பெற்றோர்களில் பலரும் சரியாக சாப்பிடாத காரணத்தால் குடலில் அடைப்பு ஏற்பட்டு, உடல் மெலிந்து வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே கிடந்து துன்புறுகிறார்கள். ஆகவே, பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் மேல் அன்பு வையுங்கள். அதேசமயம் பகிர்ந்து உண்ணுவதையும் கற்றுக் கொடுங்கள்!
குழந்தைகளே! நாம் உண்பதைப் பார்த்து மகிழும் பெற்றோருடன் நாமும் உணவைப் பகிர்ந்துண்டு வாழலாமே!
– தென்றல்