உலக நாடுகள்
அமைவிடமும் பரப்பளவும்:
¨ இது முழுவதும் வட அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரு மத்திய மேற்கு அய்ரோப்பிய நாடாகும்.
¨ இதன் வடக்கு எல்லைகளாக பால்டிக் கடலும், டென்மார்க் நாடும் அமைந்துள்ளன.
¨ தெற்கே ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளும், கிழக்கே போலந்து மற்றும் செக் குடியரசும் அமைந்துள்ளன.
¨ மேற்கே பிரான்ஸ், லெக்சம்பர்க், பெல்ஜிய நாடுகள் அமைந்துள்ளன.
¨ நாட்டின் மொத்த பரப்பளவு 3,57,168 சதுர கிலோ மீட்டர். பரப்பளவு அடிப்படையில் உலகின் 63வது நாடு.
¨ இதன் தலைநகர் பெர்லின்.
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨ ஆப்ஸ் மலையிலிருந்து வடகடல் வரையில் உயர்ந்த மேட்டு நிலங்களாகவும், நடுப்பகுதி தாழ் நிலமாகவும் உள்ளது.
¨ ரைன், தான்யூப், எல்பே போன்றவை முக்கிய ஆறுகளாகும்.
¨ அல்ஸன் பகுதியில் பனியாறுகள் காணப்படுகின்றன.
¨ இதன் காலநிலை மிதவெப்ப பருவத்தை அதிகம் கொண்டதாகும்.
¨ இதன் உயிரியல் சூழலியல் மண்டலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
¨ அய்ரோப்பிய -_ மத்திய தரைக்கடல் கலப்புக்காடுகள் மற்றும் வடகிழக்கு _ அட்லாண்டிக் தாழ்நிலைக் காடுகள்.
¨ மொத்த நிலத்தில் 34% விளைநிலங்-களாகவும், 30.1% காடுகளாகவும், 13.4% புல்வெளிப் பகுதிகளாகவும், 11.8% குடியிருப்புப் பகுதிகளாகவும் உள்ளன.
¨ காடுகள் மத்திய அய்ரோப்பாவின் பொதுவான இலையுதிர் காடுகளாக உள்ளன. அழிக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் தற்போது ஊசியிலைக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
¨ முக்கிய மரங்கள் பீச், ஓக், இஸ்புரூஸ், ஃபர், பைன், லார்ச் போன்ற மர வகைகள் உள்ளன.
¨ பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசனங்கள், பாசிகள் போன்றவை முக்கிய தாவரங்களாகும்.
¨ முக்கிய காட்டு விலங்குகள் மான், காட்டுப்பன்றி, நரி, அய்ரோப்பிய முயல், நீரெலி போன்றவை.
மக்களும் மொழியும்:
¨ 2015ஆம் ஆண்டு தோராயக் கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 8,17,70,900 பேர். (உலக அளவில் 16ஆம் இடம்)
¨ நாட்டின் அலுவலக மொழி ஜெர்மன். மேலும் டச்சு, இங்லீஷ், டானிஷ், லோஜெர்மன், செர்பியன், ரோமானியம், பாரசீகம் போன்றவை சிறுபான்மையாக அங்கு பேசப்படும் மொழிகளாகும்.
¨ நாட்டின் குழந்தைகளுக்கு 3 ஆண்டுகள் பாலர்பள்ளி (Kindergarden) கல்வியும், அதன்பிறகு ஒன்பது ஆண்டுகள் பள்ளிக் கல்வியும் கட்டாயக் கல்வியாகும்.
¨ நாட்டின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள் ஹைடல்பர்க் பல்கலைக்கழகம், லெய்ப்சிங் பல்கலைக்கழகம், ரோஸ்டக் பல்கலைக்கழகம், க்ரைஸ்வாடு பல்கலைக்கழகம், பெர்லின் பல்கலைக்கழகம், கொலோன் பல்கலைக்கழகம் போன்றவையாகும்.
இயற்கை வளமும் பொருளாதாரமும்:
¨ கிடைக்கும் முக்கிய இயற்கை தாதுக்கள் இரும்பு, நிலக்கரி, பொட்டாஷ், லிக்னைட், யுரேனியம், தாமிரம், இயற்கை எரிவாயு, உப்பு, நிக்கல், மரச்சாமன்கள் ஆகியவையாகும்.
¨ இந்நாட்டு பொருளாதாரம் பெரும்பகுதி சேவைத் துறையையே சார்ந்துள்ளது.
¨ தொழில் துறையில் பங்களிப்பு 28% ஆகும்.
¨ முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்: வாகனங்கள், எந்திர தளவாடங்கள், வேதிப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், மின் சாதனங்கள், மருந்துகள், உலோகத் தகடுகள், உணவுப் பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவையாகும்.
நாணயம்: யூரோ.
வரலாற்றுச் சுவடுகள்:
¨ ஜெர்மனியில் 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே முதல் மனிதத் தொல்லுயிரான நியாண்டர்தால் மனிதனின் தாடை எலும்பு கிடைத்துள்ளது.
¨ ஜெர்மானிய குழுக்கள் வெண்கலக் காலம் முதலே இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
¨ 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ரோம் பேரரசின் மய்யப் பகுதியாக இருந்தது.
¨ 1814இல் 39 சுதந்திர அரசுகளைக் கொண்ட ஜெர்மனி கூட்டரசு உருவாக்கப்பட்டது.
¨ 1871இல் ஜெர்மன் ஒரே பேரரசாக அறிவிக்கப்பட்டது.
¨ 1914-_1919 முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனி சிதைக்கப்பட்டது.
¨ 1933இல் அடாஃப் ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்து சர்வாதிகாரியானார். அவரது பழிவாங்கும் நோக்கத்தாலும், இன அழிப்பு கொள்கையாலும். ஜெர்மன் அழிவுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்கின.
¨ 1939இல் இரண்டாம் உலகப் போர் ஜெர்மனியால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
¨ இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனி இரண்டாக பிரிக்கப்பட்டது.
¨ 1990ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டன.
அரசு முறை:
¨ ஜெர்மன் ஒரு பாராளுமன்ற கூட்டாட்சி குடியரசு நாடாகும்.
¨ நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார்.
¨ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் சான்செல்லர் (Chancellor) என்று அழைக்கப்படுகிறார்.