இயற்கையைப் பாதுகாப்போம்…இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!
யானை என்றால்… நமக்கு எவ்வளவு பிடிக்கும்! அதன் பேருருவம், தும்பிக்கை, தந்தங்கள், பெரிய கால்கள், மெல்ல நடக்கும் நடை, அகன்று விரிந்த காது என்று அவ்வளவு ரசித்திருக்கிறோம். காட்டின் பேருருவாக, கம்பீரமாகத் திரியும் அவற்றின் வாழ்க்கை எத்தனை அழகானதாக இருந்திருக்கும்.
ஆனால், இன்று காடுகளை அழித்து, காட்டுயிர்களின் தடங்களை வழிமறித்து பெரும் நிறுவனங்களையும், ஆசிரமங்களையும், கட்டடங்களையும் உருவாக்கி, அவற்றின் இயல்பு வாழ்க்கையைக் கெடுத்து, வாழிடத்தைப் பறித்துக் கொண்டு…
“சிறுத்தை ஊருக்குள் வந்தது… யானை வயலுக்குள் புகுந்தது…” என்று அவற்றின் மேல் பழி போட்டு வருகிறோம். கடந்த மாதத்தில் மட்டும் தமிழக -கேரள எல்லையில் சில யானைகளை ரயிலுக்குப் பலி கொடுத்தும், பிடித்துக் கொண்டுபோய் உயிரிழக்க வைத்தும் இழந்திருக்கிறோம்.
நாம் இழந்த யானைகளின் நினைவாக, இவ்விதழில் அசுரன், வீரன், மகா, கஜா என்று யானைகள் ஆங்காங்கே உலா வருவார்கள். மகிழுங்கள்! இயற்கையைப் பாதுகாப்போம்… இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!