• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

201…6 கொஞ்சம் நீளம்!

2016_aug_pinju35
ஆகஸ்ட்

இந்த ஆண்டு, மற்ற ஆண்டுகளை விட நொடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கீடும் வகையில் கூடுதலாக ஒரு நொடியை சேர்க்க பன்னாட்டளவில் நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமைப்பான அமெரிக்காவில் உள்ள தேசிய தர மற்று:ம தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Standards and Technology) முடிவு செய்துள்ளது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கெண்டு பூமியையும் சுற்றி வருகிறது. அது தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறேம்.

ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், நொடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், “அணுவியல் கடிகாரங்கள்’ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டு வருகிறது.

ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி நொடிகள் மெதுவாகச் சுழல்கிறது.

இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்துக்கும், துல்லியமான அணுவியல் கடிகார நேரத்துக்கும் சுமார் ஒரு நொடி வேறுபாடு காணப்படுகிறது. இதை ஈடு செய்ய உலகக் கடிகாரங்களில் ஒரு நொடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. அதாவது, அந்த ஆண்டின் ஏதாவது ஒரு நிமிடத்திற்கு 61 நொடிகள் இருக்கும்.
இந்த வேறுபாட்டை அவ்வப்போது சரி செய்துகொள்வதற்கான பன்னாட்டு ஒப்பந்தம் கடந்த 1970-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பன்னாட்டு நேரத்தைக் கணக்கிட்டு பராமரித்து வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு, பன்னாட்டு நேரப்படி (UTC) இந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-ஆவது நொடிக்குப் பிறகு கூடுதலாக ஒரு நொடியை சேர்க்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக 11.59.59 மணிக்கு அடுத்த நொடியும் 11.59.59 மணியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நேரப்படி இது 2017 ஜனவரி 1-ஆம் நாள் காலை 10:29:59-க்கு நிகழும்.

நொடிகளை சேர்ப்பது நேரத்தை துல்லியமாக கணக்-கிடுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் தான், 1972 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலகக் கடிகாரங்களில் 26 முறை நொடிகளை கூடுதலாக சேர்க்கப்-பட்டுள்ளன. இறுதியாக கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஒரு நொடி சேர்க்கப்பட்டது.

இவ்வாறு சேர்க்கப்படும் நொடி “லீப்” நொடி என அழைக்கப்படுகிறது. உலகக் கடிகாரங்கலில் கூடுதல் நொடிகள் சேர்க்கப்படும் பேதெல்லாம், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருகிறது என்று பொருள். அதனால் தான் நொடிகள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. இப்படியே பேனால் சில நூற்றாண்டுகளில் “பூமி சுழல்வது நின்று விடும்” என்ற கருத்து தவறானது.

19
தமிழ் பிறந்தநாள் பாடல்27th July 2016
சுற்றுச் சூழல்2nd August 2016சுற்றுச் சூழல்

மற்ற படைப்புகள்

2016_aug_pinju40
ஆகஸ்ட்
1st August 2016 by ஆசிரியர்

செவ்வாய்க் கிரகம் போலாமா?

Read More
2016_aug_pinju28
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

படக்கதை

Read More
2016_aug_pinju9
ஆகஸ்ட்கதை கேளு கதை கேளு
2nd August 2016 by -விழியன்

எங்கே இருக்கு சின்னு மரம்?

Read More
2016_aug_pinju63
ஆகஸ்ட்
1st August 2016 by ஆசிரியர்

பெருந்திருடன் புதிய அர்ஜென்’டைனோ’சர்

Read More
ஆகஸ்ட்
27th July 2016 by ஆசிரியர்

தமிழ் பிறந்தநாள் பாடல்

Read More
2016_aug_pinju24
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p