வாசகர் கடிதம்
“சும்மா மொக்க போடாதீங்க’’ நன்றாய் இருந்தது. அதில் இண்டர்ஃபெராமீட்டர் பற்றி இன்னும் தெளிவாக விளக்கி இருக்கலாம். மின்சாரம் எதனால் ஆனது? தொடரை சற்று எளிமையாக எழுதினால் நன்றாக இருக்கும். “பிஞ்சுகளே! தெரிந்துகொள்ளுங்கள்’’ பகுதியினால் நிறைய நமது சட்டமன்றம் பற்றி அறிந்துகொண்டேன். பிஞ்சுகளின் ஓவியங்கள் மிகவும் பிடித்திருந்தது. மூளைக்கு வேலை கொடுக்கும் பகுதிகள், போட்டிகள் இருந்தால் இன்னும் ஆர்வத்துடன் புத்தகத்தை படிக்கும் எண்ணம் வரும்.
எஸ்.எம்.அபிநயா,
ஒன்பதாம் வகுப்பு, ‘அ’ பிரிவு,
வேடவள்ளி வித்யாலயா,
வாலாஜாபேட்