வண்டலூரில் புதிய வரவுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மைசூரு உயிரியல் பூங்காவிலிருந்து வசந்தன் என்ற இந்திய ஆண் ஓநாய் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் வயது 7 மாதமாகும். இந்தியாவில் அய்ந்து வகை ஓநாய்கள் இருக்கிறதாம். இவற்றை பார்த்தால் வேறுபாடு தெரியாது.
நிறம், அளவு, நீளம் மற்றும் முடிப் போர்வையின் வளமை ஆகியவற்றைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்னொரு வரவு. ஆனால் அது பிறந்துள்ளது. அரிய வகை உயிரினமான இந்திய காட்டுக் கழுதை, குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்தக் குட்டியின் தாய், தந்தை கழுதைகள் குஜராத் மாநில ஜூனாகத்தில் உள்ள சக்கர்பர்க் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டு-வரப்பட்டவையாகும். இவை வழக்கமாக ரன் ஆப் கட்ச் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.
மேற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென்கிழக்கு ஈரான் ஆகிய நாடுகளில் பரந்து வாழ்ந்த இவ் வுயிரினம் இப்போது ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மட்டும் தான் வாழ்கிறது.