போட்டி நீட்டிப்பும் ஓரெழுத்துக்குப் பரிசு அறிவிப்பும்
கடந்த இதழின் பின்னட்டையில் வெளியிடப்பட்டிருந்த எழுத்தோவியங்களில் ‘E’ என்னும் எழுத்துக்கு உரிய படம் இடம்பெறவில்லை. அதனைக் குறிப்பிட்டு ஒரு படம் வரைந்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு யாழ் ஒளி.
நன்றாக இருக்கிறதா? ‘E’ என்னும் எழுத்துக்கான பரிசு வி.யாழ் ஒளிக்கு வழங்கப்படுகிறது.
அவரும் இன்னும் சிலரும் மற்ற எழுத்துகளுக்கும் படங்கள் அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் பலர் இப்போது தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள், அதனால் அடுத்த மாதம் வரை கால நீட்டிப்பு. ‘O’முதல் ‘Z’ வரையிலான எழுத்துகளுக்கு உங்கள் படைப்புகளையும் அனுப்புங்கள். விசயம் என்னவென்று புரியாதவர்கள் கடந்த இதழ் (2017 பிப்ரவரி) பின்னட்டையைப் பார்க்கவும்.