ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்தியா கடந்த பிப்ரவரி 15 அன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து, ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.
இது ஓர் உலக சாதனையாகும். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஒரே விண்கலனில் 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி ருஷ்யா சாதனை புரிந்திருந்தது. ஆனால் அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.
பிஎஸ்எல்வி – சி 37 என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் ஏந்திச் சென்ற 104 செயற்கைக் கோள்களில் 3 மட்டுமே (கார்டோசாட், இன்ஸ் 1ஏ, இன்ஸ் 1பி) இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். எஞ்சிய 101 செயற்கைக் கோள்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவையாகும். இதில் 96 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.
குறைந்த செலவில் அனுப்பப்பட்ட பி எஸ் எல் வி – சி 37 ராக்கெட் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.