புடிச்சாலும் புளியங்கொம்பை..
விடுமுறைக்காலத்தில மரத்தில போய் தொங்குறேன்னு கிளை முறிஞ்சு விழுந்திடாதிங்க…
“பிடிச்சாலும் புளியங்கொம்பைப் பிடிக்க வேண்டும்!’’ என்பது நம் பழமொழி.
முருங்கை, இலவு போன்ற மரங்களின் கிளைகள் பெரிதாக இருந்தாலும் எளிதில் முறிந்துவிடும். ஆனால், புளியம்கொம்பு விரல் அளவு தடிமன் கொண்டதாக இருந்தாலும் அதில் ஒரு ஆளே தொங்கினாலும் உடையாது.
இவற்றிற்கு என்ன காரணம்?
முருங்கை, இலவு இவற்றின் கிளைகளில் நார்த்தன்மை இல்லை. ஆனால், புளியங்கொம்பில் நார்த்தன்மை அதிகம். எதில் நார்த்தன்மை இருக்கிறதோ அது எளிதில் உடையாது, முறியாது.
அப்படித்தான் நம் உடலும் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து இல்லையென்றால், அது வலுவுடன் இருக்காது. எனவே, நார்ச்சத்துள்ள, வெந்தயம் போன்றவற்றை நிறைய உண்ண வேண்டும்.
– ஒளிமதி