தீபாவளியினால் விளைந்த கேடு
சென்னை பெரியார் பிஞ்சு அலுவலகத்துக்கு அருகில் உள்ள மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த மரங்கொத்தி பறவைக்கு உண்டு. இதன் வித்தியாசமான ஓசை நண்பகல் நேரங்களில் அய்யாவின் நினைவிடப் பகுதிகளை ரம்மியமாக்கும், தீபாவளி என்ற முட்டாள் தனமான ஒரு பண்டிகையால் இந்தப்பறவை இன்று உயிரிழந்துள்ளது, அருகில் உள்ள வடநாட்டுக்காரர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீபாவளிக்கு முதல்நாள் இரவு தொடர்ந்து பட்டாசுகளை வெடித்த காரணத்தால் புகைமூட்டம் அதிகமாகி சுவாசிக்க வழியின்றி மயங்கி விழுந்து மரணமடைந்துவிட்டது, மனிதர்களின் பட்டாசு வெடிக்கும் அற்ப ஆசைக்கு பலியானது இந்த உயிர். இந்த மரங்கொத்தியின் மரணத்தால் ஏற்படும் பாதிப்பு
இந்த மரங்கொத்தி மரங்களில் உள்ள பூச்சிகளை/புழுக்களை சாப்பிடுகிறது, மழைக்காலங்களில் மரங்களில் மீது பாசிகள் படிகிறது, இதில் பூஞ்சைகள் வளர்ந்து விடுகிறது, இந்த மரங்கொத்தி பூச்சி புழுக்களை தின்று மரத்தை பாதுகாக்கிறது, பாசியை பிய்த்து கூடுகட்டவும், உணவுக்காகவும் பயன்படுத்துகிறது, இதன் மூலம் மரத்தின் ஆயுள் காக்கப்படுகிறது, அதுமட்டுமல்ல இது மழைக்காத்தின் துவக்கம். இது முட்டையிட்டு அதில் குஞ்சுகள் பறக்கும் தருணத்தில் இருக்கும். இப்போது நாம் ஒரு மரங்கொத்தியை மட்டும் கொல்லவில்லை, பல மரங்களை கொலைசெய்ய வழிவகை செய்துவிட்டனர். இது ஒரு மரங்கொத்திக்கு நடந்தது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அன்றைய தினத்தில் புகை மண்டிக் கிடந்தது. அது பலிகொண்டது இன்னும் எத்தனை உயிர்களோ?
-சரா