செய்து அசத்தலாம்
தேவையான பொருட்கள்:
1. சதுர வடிவ, நீல நிற, சற்று தடிமனான காகிதம்.
2. கருப்பு நிற ஸ்கெட்ச் பென்.
செய்முறை
1. முதலில் நீலநிற காகிதத்தை எடுத்து திருப்பி வைத்து படம் 1இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.
2. பிறகு படம் 2இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.
3. பின்பு படம் 3இல் காட்டியபடி மடித்த பாகத்தை இடதுபுறமாக மடிக்கவும்.
4. அதை, அதில் பாதியளவு, படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடிக்கவும்.
5. பின்பு படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை பின்புறமாக மடித்துவிட்டுக் கொள்ளவும்.
6. பிறகு படம் 6இல் காட்டியபடி வலது புறமுள்ள பாகத்தை கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.
7. இப்பொழுது படம் 7இல் காட்டியபடி இடது பக்கத்தை உட்புறமாகவும், வலது புறத்தை மேல் பக்கமாக மடித்துவிட்டுக் கொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு சூப்பராக நீலத் திமிங்கலம் ரெடியாகிவிடும். அதில் ஸ்கெட்ச் பென் உதவியோடு கண்ணை வரைந்து கொள்ளவும்.
– வாசன்