செய்து அசத்துவோம்

தேவையான பொருட்கள்:
1. சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம்.
2. கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா.
செய்முறை
1. அரக்கு வண்ணக் காகிதத்தை திருப்பிவைத்து படம் 1இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடித்துக் கொள்ளவும்.
2. பிறகு படம் 2இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை இரண்டு பக்கத்தையும் உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.
3. பின்பு படம் 3இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெளிப்புறமாக மடித்துக் கொள்ளவும்.
4. பின்பு படம் 4இல் காட்டியபடி கீழ்ப்புறத்தை மேல்புறமாக மடிக்கவும்.
5. பிறகு படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்புறமாக மடித்துக்கொள்ளவும்.
6. இப்பொழுது மேல்புற முனைகளை மடித்துக் கொள்ளவும்.(உள்புறமாக). அதேபோல கீழ்ப்புற முனைகளையும் உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.
7. பிறகு அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு அருமையான குட்டி யானை முகம் கிடைத்துவிடும். அதில் கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா உதவியுடன் கண்ணை வரைந்து கொள்ளவும்.
– வாசன்