பலன் எதிர்பார்த்து..
= கூடு கட்டத் தெரியாத…
குயில் நல்லாப் பாடுது!
மகசூல் பண்ணத் தெரியாத…
மண் புழு உரத்தை சேர்க்குது!
= கரை யேறத் தெரியாம…
குளமும் தளும்பி நிக்குது!
செலவழிக்க தெரியாம…
தேனீ கூடு கட்டுது!
= கூலி ஏதும் வாங்காமல்…
காகம் சுத்தம் செய்யுது!
பேசக் கூட தெரியாத…
நாயும் நன்றிக் காட்டுது!
= வேட்டையாடத் தெரியாம…
வான(ம்) வில்லை வளைக்குது!
மதிப்பு ஏதும் தெரியாம..
மரங்கள் கனியைக் கொடுக்குது!
= கணக்கு பார்க்கத் தெரியாம…
கதிரவன் ஒளியைப் பாய்ச்சுது!
கண்ணுக்கென்றும் தெரியாம…
காற்றும் சேவை ஆற்றுது!
= மறைச்சு வைக்கத் தெரியாம…
மழையும் கொட்டித் தீர்க்குது!
எல்லாம் தெரிந்த மானுடம் – பலனை
எதிர்பார்த்துத் திட்டம் போடுது!<