உலக நாடுகள் – கென்யா
– தமிழோவியன்
அமைவிடமும் எல்லைகளும்:
>> கென்யக் குடியரசு என்ற அழைக்கப்படும் கென்யா ஒரு கிழக்கு ஆப்ரிக்க நாடாகும். இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே எத்தியோப்பியாவும், கிழக்கே சோமாலியாவும், தெற்கே தான்சானியாவும் மேற்கே உகாண்டாவும், வடகிழக்கே சூடானும் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.
>> கென்யாவின் தலைநகரம் நைரோபி.
>> நாட்டின் மொத்தப் பரப்பளவு 5,80,367 கி.மீ2 (2,24,080 சதுர மைல்)
மொழியும் மக்களும்:
>> ஆட்சி மொழிகள் ஆங்கிலம் மற்றும் சுவாகிலி
>> மக்கள் தொகை 48 மில்லியன்
>> மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும் இறப்பு விகிதம் அதிகமாகவும் உள்ளது.
>> 97% ‘பான்டு’ மற்றும் ‘நிலோடிக்’ மக்கள் அதிக அளவு வசிக்கிறார்கள்.
>> 83% மக்கள் கிறித்துவ, 11.2% மக்கள் இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுகின்றனர்.
>> 2.4% மக்கள் மத மறுப்பாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
>> பல்வேறு வகையான கலாச்சார, பண்பாடுகளை உடைய நாடு.
>> பல்வேறு வகையான கிராமிய இசை மற்றும் பாடல்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன.
>> கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை, தடகளப் போட்டிகள் போன்ற வகைகளில் உலகத் தரமிக்க வீரர்களைக் கொண்ட நாடு.
>> உலகத்தரமிக்க ஓட்டப் பந்தைய வீரர்களைக் கொண்ட நாடு.
இயற்கை:
>> கென்யா வெப்பமண்டல நாடு.
>> தலைநகர் நைரோபியை சுற்றி குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.
>> நைரோபி நகரைச் சுற்றி சவானா புல்வெளி நிலங்கள் காணப்படுகின்றன.
>> உலகளவில் மிகப் பிரபலமான நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி இங்கு உள்ளது.
>> கென்ய வன விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, எருமை, நீர் யானை மற்றும் ஒட்டகச்சிவிங்கி, யானை ஆகியன அதிக அளவு உள்ளன.
>> அதிக அளவு தேசிய விலங்குகள் பூங்கா உள்ள நாடு.
>> கென்யாவின் உயரமான கென்யமலை, மொத்த ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிக உயரமான மலையாகும்.
பாட்டியன் (17,058 அடி) நெலியோன் (17,022 அடி) லெனானோ (16,355 அடி) என இம்மலையில் மூன்று மிக உயரமான சிகரங்கள் உள்ளன.
பொருளாதாரம்:
>> விவசாயத் தொழிலாளிகள் நிறைந்துள்ளனர்.
>> அய்ரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் காபி மற்றும் மலர் வகைகளை ஏற்றுமதி செய்யும் நாடு கென்யா.
>> நாணயம் கென்ய சில்லிங் (ரிணிஷி)
>> சுற்றுலா மற்றும் விவசாயத்தில் அதிகளவு வருமானம் பெறுகிறது.
>> கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பொருளாதாரத்தில் வளரும் நாடு.
>> மலர்களை ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
>> நாட்டின் வளர்ச்சியடைந்த மூன்று நகரங்களாக நைரோபி, மேம்பாஸா, கிசுமு ஆகியவை உள்ளன.
>> சாலை, இரயில்வே, வழி விமானப் போக்குவரத்துகள் தரமாக உள்ள நாடு. கென்யாவில் 15 விமான நிலையங்கள் பரபரப்புடன் இயங்குகின்றன.
>> டானா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள டர்க்வெல் ஜார்ஜ் அணைக்கட்டு மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்கப்பட்டு நாட்டுக்குப் பயன்படுகிறது.
>> அதிகப்படியான குழந்தைகள் கல்வியில்லாமல் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் நிர்வாகம்:
>> இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த கென்யா 1963 டிசம்பர் 12இல் விடுதலை பெற்றது.
>> கென்யா குடியரசு நாடு.
>> இங்கு குடியரசுத் தலைவரே ஆட்சி மற்றும் அதிகாரத் தலைவர் ஆவார்.
>> நாடாளுமன்றம் மேலவை, கீழவை என இரு அவைகளைக் கொண்டது.
>> பல கட்சி ஆட்சி முறை உள்ள நாடு.
>> கென்யாவை 1888 முதல் 1962 ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர்.
>> இரண்டாம் உலகப் போரில் பெருமளவு கென்யர்களையே இங்கிலாந்து பயன்படுத்தியது.
>> தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய படைகளை இராணுவத்தில் கொண்ட நாடு.
>> கென்யா நிர்வாகத்திற்காக 47 கவுண்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
>> கென்யாவில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் அரசு கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
உணவு
>> கென்யர்கள் தமிழர்களைப் போலவே 3 வேளை உணவை உட்கொள்கின்றனர். அவர்களின் உணவில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது.
>> ‘உகாலி’ என்ற உணவு இங்கு மிகப் பிரபலம்.<