இறந்தவர் உயிர் உடலைவிட்டு வெளியே போகிறது?
இறந்தவரின் உயிர் அவர் உடலைவிட்டு வெளியே செல்கிறது என்று பலரும் எண்ணுகின்றனர். இது அறியாமை மட்டுமல்ல, அசல் தவறும் ஆகும்.
உயிர் என்பது உடலைவிட்டுப் பிரிந்து செல்வது இல்லை. விளக்கில் எரிகின்ற நெருப்பு அணையும்போது அது எங்கும் செல்வதில்லை. அதேபோல்தான் உயிர்த் தன்மையை உடல் இழக்கிறது.
உயிர் என்பது உடலுக்குள் புகுவதும் இல்லை. விலகிச் செல்வதும் இல்லை.
பெற்றோர் உயிரிலிருந்து பிள்ளைக்கான உயிர் பிரிகிறது. எரிகின்ற விளக்கில் உள்ள நெருப்பு இன்னொரு விளக்கில் ஏற்றப்படும்போது பிரிவதுபோல.
விளக்கில் எரியும் நெருப்பு அணைவதுபோல இறப்பின்போது உயிர்த் தன்மையை உடல் இழக்கிறது அவ்வளவே.
இறப்பு என்பது உயிர்த் தன்மையை உடல் இழத்தல் என்பது மட்டுமே! ஓர் உடலுக்கான உயிர் தாய் தந்தையின் உயிரணுக்களில் உள்ள உயிர்தானே தவிர புதிய உயிர் வருவதும் இல்லை, போவதும் இல்லை.
இதை அறியாமல் இறந்தவுடன் அவரது உயிர் வெளியே போவதாக எண்ணி, அதை அனுப்பி வைக்க ‘வழிகூட்டி விடல்’ என்ற சடங்கு செய்து, தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி வைப்பது வடிகட்டிய முட்டாள்தனம் ஆகும்.
உயிரியையே செயற்கையாக உருவாக்கும் நிலைக்கு மனிதன் இன்றைக்கு வந்துவிட்டான். எனவே, இப்படிப்பட்ட மூடத்தனங்களை விட்டொழிக்க வேண்டும்.