வாசகர் மடல்
எங்களின் தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களும், வணக்கங்களும். 2017இன் சிறந்த பெரியார் பிஞ்சு வாசகர்களாக நாங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி இருந்த செய்தி எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசென்று விட்டது. இதைப் பார்த்த எங்கள் பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், ஆசிரியப் பெருமக்களும் எங்களை வெகுவாகப் பாராட்டினார்கள். இப்பாராட்டுகளையும், போற்றுதல்களையும் எங்களுக்குப் பெற்றுத்தந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழுக்கு நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக.
அன்புடன்,
இர.அன்புச்செல்வன், இர.அறிவரசி