குவைத் நாடு
அமைவிடமும் எல்லைகளும்:
¨ குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும்.
¨ பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன.
¨ மொத்தப் பரப்பளவு 17,818 கி.மீ2 (6,880 சதுர மைல்)
¨ ஈராக்குக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே அமைந்துள்ள சிறிய நாடாகும்.
¨ தலைநகரம் குவைத் சிட்டி.
மக்களும் மொழியும்:
¨ 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 4 மில்லியன் ஆகும்.
¨ ஆட்சி மொழி அரபு.
¨ மக்கள் குவைத்தி என அழைக்கப்படுகின்றனர்.
¨ நாட்டில் 85% மக்கள் முசுலிம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்களுள் 70% மக்கள் சன்னி பிரிவையும், 30% மக்கள் ஷியா பிரிவையும் சார்ந்தவர்கள்.
¨ 84% சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவராக உள்ளனர்.
¨ மக்கள் தொகையில் உலகின் 140ஆவது நாடு.
¨ அரபு மொழியோடு ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகிறது.
பொருளாதாரம்:
¨ குவைத் நாட்டின் நாணயம் குவைத் தினார்.
¨ குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது.
¨ கல்ஃப் ரூபாய்க்கு மாற்றாக 1961இல் தினார் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
¨ குவைத் நாட்டின் பொருளாதாரம் பெட்ரோலியத்தை நம்பியே உள்ளது. பெட்ரோலியம் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும்.
¨ தனிநபர் வருமானத்தில் உலகின் நான்காவது வளமான நாடு.
¨ உலகக் கச்சா எண்ணெய் வளத்தில் 10% குவைத் நாடு கொண்டுள்ளது.
¨ 1937இல் குவைத்தில் மிகுந்த எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அபரிமிதமான எண்ணெய் வளத்துடன் வளர்ச்சி அடையத் தொடங்கியது.
வரலாற்றுக் குறிப்பு:
¨ குவைத் நாட்டின் வரலாறு 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. அரேபியர்கள் அந்தக் காலக்கட்டத்தில்தான் குவைத் பகுதிக்குள் நுழைந்து குடியேறத் தொடங்கினர்.
¨ ஈராக்குக்குக் சொந்தமான எண்ணெய்க் கிணறுகளில் குவைத் எண்ணெய் திருடி விற்பதாகக் குற்றம் சாட்டி போரில் ஈடுபட்டு ஈராக், குவைத் நாட்டை 1990இல் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.
¨ 1991இல் அமெரிக்கா மற்றும் அய்.நா. தலையீட்டால் ஈராக் குவைத்தை விட்டு வெளியேறியது.
¨ வெளியேறுகையில் குவைத்தில் மொத்தம் உள்ள 1080 எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்துவிட்டுச் சென்றது.
¨ 1990-_91 ஆண்டுகளில் சேதமடைந்த எண்ணெய் உள் கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் $5 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது.
அரசு முறை:
¨ இங்கு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி நடைபெறுகிறது.
¨ குவைத் அய்க்கிய இராச்சியம் (பிரிட்டனிடமிருந்து) ஜூன் 19, 1961இல் விடுதலை அடைந்தது.
¨ குவைத் நாட்டில் அரசரைத் தொடர்ந்து அமீர் மற்றும் பிரதமர் அதிகாரம் மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள்.
¨ குவைத் நாட்டின் தேசிய பறவை சாகர் ஃபால்கான் (Saker Falcon)
¨ தேசிய விலங்கு ஒட்டகம்
¨ தேசிய மலர் அர்பாஜ் (Arfaj)
¨ தேசியக் கனி பேரிச்சை.
¨ தேசிய விளையாட்டு கால்பந்து.
¨ தேசிய மரம் ராயல் பால்ம்.
மேலும் அரிய தகவல்கள்:
¨ மற்ற சில அரபு நாடுகளைப் போலில்லாமல் இந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டலாம். வேலைக்குச் செல்லலாம்.
¨ இங்கு பெட்ரோல் விலையைவிட தண்ணீர் விலை அதிகம்.
¨ எண்ணெய் வளம் கண்டறியப்படுவதற்கு முன்பு உலகின் ஏழை நாடாகவே குவைத் இருந்தது.
¨ குவைத்தில் மற்ற வெளிநாட்டவர்களைவிட இந்தியர்களே அதிகம் உள்ளனர்.
¨ குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகள் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
¨ குவைத்தின் மிகப் பிரபலமான உணவு “மீன்கறி”
¨ உலகின் 5ஆவது எண்ணெய் வளமிக்க நாடு.
¨ முத்துக்குளித்தல், மீன்பிடி தொழில் இங்கு அதிகமாக நடைபெறுகிறது.
¨ வளைகுடா நாடுகளில் அதிக அளவு தொலைக்காட்சி நாடகம், நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் தயாரிப்பது குவைத்திலேயே அதிகம் நடக்கிறது.
¨ குவைத்தில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி விளையாட்டுகள் விரும்பி விளையாடப்படுகிறது.
¨ குவைத் 6 கவர்னர்கள் ஆளும் நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
¨ பெருமளவு பாலைவனங்களே சூழ்ந்த நாடு.
¨ குவைத்தில் நிரந்தரமான ஆறுகள் இல்லை.
¨ சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரையே குடிநீராக பயன்படுத்தும் நாடு.
¨ அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத் கல்வித் தரத்தில் வளர்ச்சி அடைந்த நாடு.
¨ நவீனமயமாக்கப்பட்ட தேசிய நெடுஞ் சாலைகளைக் கொண்ட நாடு.
¨ பெரும்பாலான மக்கள் பேருந்துப் போக்குவரத்தையே விரும்புகின்றனர்.
¨ குவைத்தில் 2 விமான நிலையங்கள் உள்ளன. பரபரப்பான பல துறைமுகங்களும் உள்ளன.
குவைத் டவர்
¨ குவைத்தில் உள்ள டவர்களில் முருகாய் டவர் மிக உயரமானது. இதன் உயரம் 372 மீட்டர்.
¨ இந்த டவரிலிருந்து பார்த்தால் குவைத் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளைப் பார்க்க முடியும்.
பைலக்கா தீவு
¨ பைலக்கா என்ற தீவு மிகவும் பிரபலமானது. ஒரு காலத்தில் மக்கள் வசித்த தீவு. இப்போது மக்கள் வசிக்கவில்லை. போரில் பாதிப்படைந்த கட்டிடங்களே எஞ்சி நிற்கின்றன.
¨ ‘தி அவென்யூ மால்’ அங்காடித் தெரு: இது மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய அங்காடித் தெருவாகும். இந்த ‘தி அவென்யூ மால்’ 800 கடைகளைக் கொண்டது.
¨ ஹவுஸ் ஆப் மிரர்: முழுவதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட வீடு.
முக்கிய சுற்றுலாத் தலம்:
¨ குவைத் சிட்டியில் அமைந்துள்ள மாபெரும் மசூதி.
¨ இது 4 இலட்சத்து 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்தது.
¨ இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 5 ஆயிரம் பேர் தொழுகை செய்ய முடியும்.