செய்து அசத்துவோம்
தேவையான பொருட்கள்:
1. உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான சதுர வடிவ காகிதம்.
2. கறுப்பு நிற ஸ்கெட்ச் பென்.
செய்முறை:
1. படம் 1இல் காட்டியபடி வண்ணக் காகிதத்தை திருப்பி வைத்து, அதைக் கீழிருந்து மேலாக மடித்துக் கொள்ளவும்.
2. மடித்த காகிதத்தை படம் 2இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடித்துக் கொள்ளவும்.
3. பின்பு படம் 3இல் காட்டியபடி வலது, இடது பக்கங்களை மேல்புறமாக மடித்துக் கொள்ளவும்.
4. பிறகு படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக (இரண்டு பக்கங்களையும்) மடித்துக்கொள்ளவும்.
5. இப்பொழுது படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெளிப்புறமாக (இரண்டு பக்கங்களையும்) மடித்து விட்டுக் கொள்ளவும்.
6. இப்பொழுது அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும். பிறகு, அதற்கு தேவையான கண், மூக்கு, மீசை, வாய் போன்றவற்றை கறுப்பு நிற ஸ்கெட்ச் பென் உதவியுடன் வரைந்து கொள்ளவும்.
இப்பொழுது அருமையான முயல்குட்டி கிடைத்துவிடும்.
-வாசன்