சொர்க்கம் நரகம் மறுபிறவி கிடையாது (ஸ்டீபன் ஹாக்கிங் கண்ட உண்மைகளும், அனுபவங்களும்)
= வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது! = வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப்பிற்கு கடவுளைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவையில்லை.
= ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும்.
= பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான்.
= மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. –
= மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். –
= உலகின் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேற வேண்டும். மனிதர்கள் வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ வேண்டும்.
= என்னால் நடந்து கடக்க முடியாத பகுதிகளை என் மனதால் செல்ல விரும்புகிறேன்.
= என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.
= சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களில் மனிதன் வாழும் சூழல் உள்ளதா என ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இளம் தலைமுறையினர் இது போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.
= நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
= ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.
= நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை.
– தொகுப்பு: பா.சு.ஓவியச் செல்வன்