மலேசிய
அமைவிடமும் எல்லைகளும்:
¨ தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியாட்சி நாடு.
¨ தீபகற்ப நாடான மலேசியா, மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
¨ மேற்கு மலேசியாவையும் கிழக்கு மலேசியாவையும் தென் சீனக்கடல் பிரிக்கின்றது.
¨ மொத்த பரப்பளவு 329,847 சதுர கிமீ (127,350 சதுர மைல்கள்)
¨ மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன.
¨ மலேசியாவின் நில எல்லைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
¨ மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர்.
¨ நடுவண் அரசின் நிர்வாக மய்யம் புத்ராஜெயாவில் உள்ளது.
வரலாறு:
¨ வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாக கிடைத்திருக்கின்றன.
¨ 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் ‘புகித் ஜாவா’வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
¨ கிழக்கு மலேசியாவின் ‘சரவாக்’கில் அமைந்துள்ள ‘நியா’ குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன.
¨ கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்திலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த வணிகர்கள் குடியேற்றங்களையும் நகரங்களையும், வணிகத் துறைமுகங்களையும் உருவாக்கினர்.
¨ 11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் இராசேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தை போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அக் காலக் கட்டத்தில் சோழர்கள் மலேசியாவில் நிலையான ஆதிக்கம் கொண்டிருந்தனர்.
¨ தமிழர்கள் மட்டுமல்லாது இசுலாமியர்களும், போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், பிரித்தானிய பேரரசுகளும் வெவ்வேறு காலக்கட்டங்களில் மலேசியாவை ஆட்சி செய்துள்ளனர்.
¨ இரண்டாம் உலகப்போரின்போது 1943-_1945 வரை மலேசியாவை ஜப்பான் ஆட்சி செய்தது.
¨ 1957 ஆகஸ்டு 31 அன்று மலேசியா பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை அடைந்தது.
¨ 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று பெயர் மாற்றம் பெற்றது.
ஆட்சிப் பிரிவுகள்:
¨ மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
¨ ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் ‘முகிம்’களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
¨ எல்லா மாநிலங்களுக்கும் சமமான நிதியும், நீதியும் மலேசிய பாராளுமன்றம் வழங்குகிறது.
புவியியல்:
¨ மலேசியா உலகின் நிலப்பரப்பில் 67ஆவது பெரிய நாடாக விளங்குகிறது.
¨ சிங்கப்பூருடன் ஒரு குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
¨ கடல்சார் எல்லையை வியட்நாம் மற்றும் பிலிப்பைன்சுடன் பகிர்கிறது.
¨ ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள ‘டான்ஜீங் பியாய்’ ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது.
¨ நாட்டின் உயரமான மலைச்சிகரம் ‘கின்டாலு’ மலைச்சிகரம்.
பொருளாதாரம்:
¨ சுமத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள மலாக்கா நீரிணை உலகின் 40% சரக்குக் கப்பல்கள் செல்லும் வழியாக இருந்து மலேசிய வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.
¨ மலேசியா தொழில் வளர்ச்சியடைந்த சந்தை பொருளாதார நாடாக விளங்குகிறது.
¨ உலகளவில் உள்நாட்டு உற்பத்தியில் 29ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
¨ நாட்டில் ‘மலாயா ரிங்கிட்’ நாணயம் புழக்கத்திலுள்ளது.
மக்கள் தொகை:
¨ மலேசியா மூன்று கோடி மக்களுக்கு மேல் வசிக்கும் நாடு.
¨ மக்கள் தொகையில் உலகின் 43ஆம் நாடு.
¨ மலாய் இனக்குழுவினர் 50.5%. சீனர் 23.7% தமிழர்கள் 11% மேலும் பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.
¨ மலேசியா சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர்.
¨ மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
சமயம்:
¨ மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் இசுலாம். ஆனாலும் மற்ற சமயங்களும் பின்பற்ற அனுமதியுண்டு.
¨ தோராயமாக 61.3% இசுலாம், 19.8% பவுத்தம், 9.2% கிறித்துவம், 6.3% இந்து, 1.3% தாவோ, கன்பூசியம் மற்றும் சீன சமயத்தையும், 0.7% எந்த சமயத்தையும் சாராதவர்களாக உள்ளனர்.
மொழி:
¨ மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி மலாய். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக உள்ளது.
¨ அடுத்ததாக தமிழும் சீனமும் அதிகம் பேரால் பேசப்படுகிறது.
¨ ஆங்கில மொழி கல்விக் கூடங்களிலும் வணிக மய்யங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
¨ இதோடு அல்லாமல் மேங்கிலிசு என்னும் மொழியும் வழக்கத்திலுள்ளது. இது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சையான ஆங்கிலம் ஆகும்.
¨ மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.
பண்பாடு:
¨ வரலாற்றுக் காலம் முதலே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டு தாக்கங்கள் இங்கு உண்டு.
¨ 1971இல் மலேசியா அரசு, தேசியப் பண்பாட்டுக் கொள்கையை அறிவித்து, இசுலாம் மதத்தையும், மலாய் மொழியையும் மற்றவற்றைவிட கூடுதலாக பரப்பி வருகிறது.
விளையாட்டு:
¨ மலேசியாவில் பரவலாக விளையாடப் படுபவையாகக் கால்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிஸ், ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம் ஆகியன உள்ளன.
¨ தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் ‘சிலாட்’ மற்றும் ‘டோமோய்’ என்னும் இரு வகைகள் பயிற்றுவிக்கப்படுகிறது-.
ஊடகம்:
¨ மலேசியாவின் முதன்மை ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
¨ இருப்பினும் எதிர்கட்சிகளும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வைத்துள்ளனர்.
¨ மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.
¨ அரசுத் தலையீடு இருப்பதால் ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாகவே உள்ளது.
உள்கட்டமைப்பு:
¨ மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.
¨ 04.7 மில்லியன் தொலைபேசி இணைப்புகளையும், 30 மில்லியன் செல்பேசி இணைப்புகளையும் கொண்டு, தொலைத்தொடர்பு பிணையத்தில் ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.
போக்குவரத்து:
¨ மலேசியாவில் ஏழு பன்னாட்டு துறைமுகங்கள் உள்ளன.
¨ முக்கிய துறைமுகமாக ‘கிளாங்’ துறைமுகம் உள்ளது.
¨ மலேசியாவில் உள்ள 98,721 கி.மீ. தொலைவு சாலைகளில், 1,821 கி.மீ. விரைவுச் சாலைகளாகும்.
¨ நாட்டின் மிக நீண்ட சாலையாக விளங்கும் வடக்கு _ தெற்கு விரைவுச் சாலை, தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
¨ 118 விமான நிலையங்கள்.
¨ 1,849 கி.மீ. தொலைவிற்கு தொடர்வண்டிச் சேவைகள்
¨ 200 தொழிற்பேட்டைகளும், டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-_டெக் பார்க் போன்ற கட்டமைப்புகள் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.
¨ 95% மக்களுக்குத் தூய குடிநீர் வசதி.
வளங்கள்:
¨ நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 ஜிகா வாட்ஸ் மேல் உள்ளது.
¨ இன்னும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும், 19 ஆண்டுக்கான எண்ணெய் இருப்பும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
¨ 16% நீர் மின் நிலையங்கள் மூலமும், 84% அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் சில தகவல்கள்:
¨ 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோடபாருவில் கட்டப்பட்ட பள்ளிவாசலே மலேசியாவில் மிகவும் பழையதாகும்.
¨ அட்டை நூடுல்சுடன் மீன் கேக், கிளிஞ்சல்கள், முளைவிட்ட பீன்ஸ் ஆகியவற்றை வறுத்துச் சமைக்கப்படும் “சார் குவேடியோவ்” மலேசியாவில் மிகவும் பிரபலமான உணவு.<