சுவிட்சர்லாந்து
அமைவிடமும் எல்லைகளும்:
¨ நிலப்பகுதிகளாலும் ‘ஆல்ப்ஸ்’ மலையாலும் சூழப்பட்ட மத்திய அய்ரோப்பிய நாடு.
¨ எல்லைகள்: வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன்
¨ மொத்த பரப்பளவு 41,285 ச.கி.மீ.
¨ பரப்பளவில் உலகின் 136ஆம் நாடு.
சுவையான தகவல்கள்:
¨ உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது.
¨ ஜெனிவா (நிமீஸீமீஸ்ணீ) மற்றும் சூரிச் (ஞீuக்ஷீவீநீலீ) நகரங்கள் நாட்டின் மிகப் பிரபலமான நகரங்களாக உள்ளன.
¨ சுவிட்சர்லாந்து நடுநிலை நாடு. 1815இல் இருந்து இது சர்வதேச அளவில் உலகப் போர்கள் உள்ளிட்ட எந்தப் போரிலும் ஈடுபடவில்லை.
¨ உலக செஞ்சிலுவைச் சங்கம், உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களைக் கொண்ட நாடு.
¨ செர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமஞ்சு (ஸிஷீனீணீஸீsலீ) ஆகிய நான்கு தேசிய மொழிகளைக் கொண்டது.
¨ சுவிஸ் தேசிய தினம்: ஆகஸ்ட் 1
வரலாறு:
¨ 150,000 ஆண்டுகளுக்கும் முன்பே சுவிட்சர்லாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்கள் இருக்கின்றன.
¨ கி.மு.15 – ரோமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ்.
¨ 1798 – பிரெஞ்சுப் புரட்சியின் படைகள் சுவிட்சர்லாந்தைக் கைப்பற்றி, ஆட்சி அமைத்தனர்.
¨ 1990 – பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக 1998 மற்றும் 2007இல் அதிபர்களாக பெண்களே இருந்தனர்.
¨ 1963 – அய்ரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பு.
¨ 2002 – அய்.நா.சபையின் உறுப்பு நாடு.
அரசியல்:
¨ முன்பு இது ஒரு கூட்டமைப்பு. ஆனால், 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. தற்போது மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட ‘கூட்டாட்சிக் குடியரசு’ ஆகும்.
¨ அரசாங்கத்தில் 3 பிரதான ஆட்சி ஆணையங்கள் உள்ளன. இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம், ஆட்சிக்குழு, கூட்டமைப்பு நீதிமன்றம்.
¨ அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள்.
¨ சமுதாய ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி, சுவிஸ் மக்கள் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக மக்கள் கட்சி போன்ற 4 முக்கியக் கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் உள்ளன.
இராணுவம்:
¨ தரைப்படை மற்றும் விமானப் படைகளை கொண்ட நாடு. நாட்டில் கட்டாய இராணுவச் சேர்க்கை உண்டு.
¨ சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருப்பதால் இங்கு கப்பல்படை இல்லை.
புவியியல்:
¨ நாட்டின் 60% பகுதியைக் கொண்டுள்ளதும், வடபகுதி முதல் தென்பகுதி வரை பரவியுள்ளதுமான ஆல்ப்ஸ் மலையின் உயர்ந்த சிகரம் டுஃபோர்ஸ்பைட்ஸ். இதன் உயரம் 4,634 மீட்டர் (15,203 அடி)
¨ சுவிட்சர்லாந்து பின்வரும் மூன்று அடிப்படை பரப்பியல் பகுதிகளாக அமைந்துள்ளன. தெற்கில் சுவீஸ் ஆல்ப்ஸ், சுவிஸ் பீடபூமி, வடக்கில் ஜீரா மலைகள்.
¨ நாட்டில் அதிகமான பள்ளத்தாக்குகளும் எண்ணற்ற அருவிகளும் உள்ளன.
¨ ஜெனிவா ஏரி, ஜூரிச் ஏரி, நியூசாடெல் ஏரி மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரி போன்ற பெரிய ஏரிகள் உள்ளன.
¨ அதிகப்படியான மேய்ச்சல் புல்வெளிகள் உள்ள நாடு.
¨ விலைமதிப்புள்ள குங்குமப்பூ, பலவகை ஒயின் திராட்சைகளும் பயிரிடப்படுகிறது.
பொருளாதாரம்:
¨ உலகின் நிலையான பொருளாதார நாடு, எளிதாக வணிகம் செய்ய ஏற்ற நாடு
¨ அயர்லாந்துக்குப் பிறகு அய்ரோப்பாவின் 2ஆவது உயர்ந்த பொருளாதார மதிப்பீட்டைக் கொண்ட நாடு.
¨ சுவிட்சர்லாந்து பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.
¨ ரசாயனம், உடல்நலம், அளவிடல் கருவிகள், இசைக்கருவிகள், ரியல் எஸ்டேட், வங்கியியல் மற்றும் காப்பீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவை சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற் துறைகளாகும்.
¨ தரமான கைக் கடிகாரத் தயாரிப்புக்கு புகழ்பெற்ற நாடு.
கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம்:
¨ பொது மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
¨ சுவிட்சர்லாந்தின் முதல் பல்கலைக்கழகம் 1460இல் பாசெல் நகரில் தொடங்கப்பட்டது.
¨ ஜூரிச் பல்கலைக்கழகம் நாட்டின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். மேலும் சுவிட்சர்லாந்தில் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
¨ சுவிஸ் விஞ்ஞானிகள் பலர் நோபல் பரிசுகள் பெற்றுள்ளனர். ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் போன்று நோபல் பரிசு பெற்ற 113 பேர் சுவிட்சர்லாந்துக்குத் தொடர்புடையவர்கள்.
¨ அமைதிக்கான நோபல் பரிசு 9 முறை சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
¨ துகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கான உலகின் மிகப்பெரிய ஆய்வகம் ஜெனிவாவில் உள்ளது.
உள்கட்டமைப்பு:
¨ நீர் மின்சாரம் – 56%; அணுசக்தி மின்சாரம் – 39%
¨ சுவிட்சர்லாந்தில் 1,638 கி.மீ. அதிநவீன சாலைகள் உள்ளன.
¨ நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக ஜூரிச் விமான நிலையம் உள்ளது.
¨ சுவிட்சர்லாந்தில் 5,063 கி.மீ நீளம் கொண்ட ரயில்வே போக்குவரத்து உள்ளது.
சுற்றுச்சூழல்:
¨ சுவிட்சர்லாந்து பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கூளங்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நாடாக உள்ளது.
மக்கள்:
¨ மக்கள் தொகை: 8 மில்லியன்
¨ அதில் 22% குடியேறிய வெளிநாட்டினர், 17.3% இத்தாலியர்கள், 13.2% ஜெர்மானியர்கள், 11.5% செர்பியர்கள்.
¨ சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 79 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 84 ஆண்டுகளாகவும் உள்ளது.
உணவு:
¨ ஃபாண்ட்யு, ரேக்லெட் மற்றும் ரோஸ்ட்டி போன்ற உணவுகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன.
¨ பால் பொருட்கள் மற்றும் க்ரையர், எம்மண்டல், பாலாடைக் கட்டிகள் போன்றவைகள் முக்கிய உணவுப் பொருட்களாக உள்ளன.
¨ 18ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் தயாரிப்பு நடைபெறுகிறது.
¨ வாலெய்ஸ், வாயூத், ஜெனிவா மற்றும் டிசினோ ஆகிய பகுதிகளில் சுவிஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது.
விளையாட்டு:
¨ பனிச்சறுக்கு, மலையேறுதல், கால்பந்து, அய்ஸ் ஹாக்கி, கோல்ஃப், டென்னிஸ் விளையாட்டுகள் மிகப் பிரபலமானவை.
¨ ‘சுவிங் ஃகென்’ எனப்படும் சுவிஸ் மல்யுத்தம் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய விளையாட்டாகும்.
¨ டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற ரோஜர் பெடரர், மார்டினா ஹிங்கிஸ் போன்றோர்கள் சுவிட்சர்லாந்தைச் சார்ந்தவர்கள்.
ஊடகங்கள்:
¨ ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன.
¨ ‘சுவிஸ் செய்தி முகமை’ (ஷிழிகி) என்ற தொலைக்காட்சி நாட்டின் முக்கிய செய்திகளை 24 மணிநேரமும் ஒலி-_ஒளி பரப்பிக்கொண்டே உள்ளது.
பண்பாடு:
¨ நாட்டில் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய, ரோமன்ஷ் பண்பாடுகள் வழக்கத்திலுள்ளன.
¨ கேளிக்கை நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறுகின்றன.
¨ திரைப்படங்கள், நாட்டுப்புறக் கலைகள் உயிர்ப்புடன் உள்ளன.
¨ இசை, நடனம், கவிதை, மரச் சிற்பக்கலை மற்றும் சித்திர தையல் கலை பெரிதும் வளர்ச்சி நிலையில் உள்ளது.
மதம்:
¨ சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ தேசிய மதம் எதையும் கொண்டிருக்கவில்லை.
¨ பெரும்பாலான மக்கள் ‘கத்தோலிக்க திருச்சபை தேவாலயங்களை’ ஏற்றுக் கொண்டுள்ளனர்.
¨ கிறித்துவம் பெரும்பான்மைமிக்க மதமாக உள்ளது. இஸ்லாமிய மக்களும் 4.3% உள்ளனர்.