கூச்சல்
இரவு நேரம். இருட்டு வீதி. தெரு நாய் ஒன்று குரைத்தபடி இங்கும், அங்கும் ஓடியது.
விளக்குக் கம்பத்தின் மேல் இதைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தன இரண்டு ஆந்தைகள்.
ஆண் ஆந்தை “யாருக்காக இந்த நாய் இப்படி ஓடி ஓடிக் குரைக்கிறது? யாராவது இதை கவனிக்கிறார்களா? இப்படிக் கத்துவதால் என்ன பயன்?” என்று கேட்டது.
அதற்கு பெண் ஆந்தை, “இந்தத் தெருவில் தனியாய் இருக்கும் நாய் இது. அதனால் அச்சப்பட்டுக் கத்துகிறது. தன்னை அச்சமற்றவன் என்று காட்டிக் கொள்ள இப்படி வீண் கூச்சல் போடுகிறது.
அதோ பார்… இருட்டில் ஒரு பூனை அமைதியாய் எலியை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது!’’ என்றது. அது காட்டிய திசையில் பார்த்து ஆண் ஆந்தை சொன்னது…
“வெட்டிக் கூச்சல்
வேலைக்கு ஆகாது’’<