மன்னிச்சூ…
பெரியார் பிஞ்சு ஆகஸ்ட் 2018 இதழின் 34ஆம் பக்கம் காணாமல் போன சூரியன் கதையின் கடைசி பத்தியின் 9ஆம் வரியில் அடடா, சூரியனை பூமி சுற்றிவரும் பாதையில், தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் பூமியோடு சேர்ந்து நாமல்லவா ஒரு சுற்று வந்திருக்கிறோம் என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம். தகவல் பிழையைச் சுட்டிக்காட்டிய செந்தமிழ் சேகுவேராவுக்கு நன்றி! பக்கம் 14, இரண்டாவது காலம் கடைசிப் பத்தியில் முதல் வார்த்தை அஸ்லாம் என்பது அஸ்ஸாம் என்றும், 20ஆம் பக்கத்தில் 3ஆம் பெட்டியில் இதுதூன் என்பது இதுதான் என்றும், பக்கம் 24இல் 2ஆவது காலத்தில் கீழிருந்து மேல் 12-ஆம் வரியில் அதனால்தான் என்பது அதனால்த்தான் என்றும், 16-ஆம் வரியில் இடியோசைக் என்பது இடியோசை என்றும், பக்கம் 25 இரண்டாவது காலம் கீழிருந்து மேல் 7ஆவது வரியில் ஒரே வாக்கியத்தில் இவை என்ற சொல் ஒரு இடத்தில் மட்டும் இடம் பெறுவதற்குப் பதில் இரண்டு இடங்களிலும் அச்சாகியுள்ளது என்று இலஞ்சி இர.அன்புச் செல்வனும், இர.அறிவரசியும் எடுத்துக்காட்டியுள்ளனர். அவர்களுக்கும் நன்றி! தவறுகளுக்கு மன்னிச்சூ…
– பொறுப்பாசிரியர்