செய்து அசத்துவோம்
பாராசூட் பார்றா!
தேவையான பொருட்கள்:
1. தடிமனான, நீள் செவ்வக வடிவிலான அட்டை.
2. ஜெம் கிளிப்,
3. தாள் வெட்டும் கத்தி,
4. அளவுகோல்,
5. பென்சில்.
செய்முறை:
1. படம் 1இல் காட்டியபடி நீள் செவ்வக வடிவ அட்டையை மேலும், கீழுமாக சரி சமமாகப் பிரித்துக் கோடுப் போட்டுக் கொள்ளவும்.
2. படம் 2இல் காட்டியபடி மேல் பக்கத்தில் சரிசமமாக இடது, வலது புறமாக நடுவில் ஒரு கோடு வரைந்து கொள்ளவும்.
3. அதை படம் 3இல் காட்டியபடி வெட்டி இருபுறமாகப் பிரித்து வைத்துக் கொள்ளவும்.
4. படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடங்களை குறித்துக் கொள்ளவும்.
5. படம் 5இல் காட்டியபடி வெட்டி உட்புறமாக மடித்துக்கொள்ளவும்.
6. இப்போது படம் 6இல் காட்டியபடி கீழ்புறத்தை மடித்து கிளிப்பை மாட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு அருமையான பாராசூட் கிடைத்து விடும்.
7. இதை, படம் 7இல் காட்டியபடி தலைகீழாகப் பிடித்து தூக்கி எறிந்தால் சுற்றிக் கொண்டே கீழே விழும்.
இது பார்ப்பதற்கு அட்டகாசமான பாராசூட் போல தோற்றமளிக்கும். செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!
– வாசன்