செய்து அசத்துவோம்
அழகிய கை விசிறி
தேவையான பொருட்கள்:
1. சிறிது தடிமனான, சதுர வடிவ, இரு பக்கமும் வண்ணமயமான காகிதம் ஒன்று.
2. அளவுகோல்
3. ரப்பர் வைத்த முழு பென்சில் ஒன்று.
4. தலை பெரியதாக உள்ள குண்டூசி ஒன்று.
5. கோடு போடுவதற்கு சீவிய பென்சில் ஒன்று.
6. கத்தரி.
செய்முறை:
1. முதலில் சதுர வடிவ அட்டையை எடுத்து, அதில் படம் 1இல் காட்டியபடி குறுக்காகக் கோடுகளைப் போட்டுக் கொள்ளவும்.
2. பின்பு படம் 2இல் காட்டியபடி நடுவில் ஒரு சிறிய வட்டத்தை வரைந்துகொள்ளவும்.
3. பிறகு படம் 3இல் காட்டியபடி நான்கு பக்க மூலைகளிலும், எண்களை குறித்துக் கொள்ளவும்.
4. பிறகு படம் 4இல் காட்டியபடி நான்கு பக்கங்களிலும் அம்புக் குறியிட்ட பகுதிவரை கத்தரி கொண்டு வெட்டி விட்டுக் கொள்ளவும்.
5. இப்பொழுது வெட்டிவிடப்பட்டிருக்கும் அட்டையில் 1ஆம் எண் மூலையை மடித்து நடுவில் உள்ள வட்டத்தில் வைத்துக் கொள்ளவும்.
6. இப்படியே மீதி மூன்று மூலைகளையும் மடித்து நடுவில் உள்ள வட்டத்தில் வைத்துக் கொள்ளவும்.
7. பின்பு அதன் மீது குண்டூசியைக் குத்தி, பின்புறம் பென்சிலின் ரப்பர் பகுதியில் அந்தக் குண்டூசியை குத்திக் கொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு அருமையான விசிறி கிடைத்துவிடும்.
பென்சிலின் கீழ்ப் பகுதியைக் கையில் பிடித்தபடி வேகமாக ஓடினால் விசிறி வேகமாகச் சுற்ற ஆரம்பிக்கும்.
– வாசன்