நச்சுப் பானம் கோகோ கோலா
கோகோ கோலா என்னும் கொடிய குளிர்பானம். குழந்தைகளைத் தொடர்ந்து பருகச் செய்யும். இதில் உள்ள Aspartame என்னும் வேதிப் பொருள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், இருதயக் கோளாறு, கிட்னி செயலிழப்பு எனப் பல நோய் பாதிப்புகளை வாரி வழங்கவல்லது. பிஞ்சுகளே குளிர் பானங்களைத் தவிருங்கள். இயற்கை பானங்களை அருந்துங்கள்!
குட்டிச் சாதனையாளர்
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 6 வயது விஸ்வேஸ்வரன் பின்நோக்கி ஓடும் போட்டியில் 1 கி.மீ தொலைவை மீட்டரை 14 நிமிடங்களில் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். 2 ஆண்டுகளில் 56 மாரத்தான் போட்டிகளில் பங்கு பெற்ற 6 வயது சிறுவன் என்கிற முதல் உலக சாதனையும், டிரட்மில்லில் 13 கிலோ மீட்டர் வேகத்தில் 6.5 கிலோ மீட்டர் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்த மற்றொரு உலக சாதனைக்கும் சொந்தக்காரர் இவர். சாதனைக்கு பயிற்சியும், முயற்சியும் தினமும் வேண்டு மென்கிறார். சாதனைகள் தொடரட்டும்.
தேர்வுக்கு நினைவாற்றல் தேவை பிஞ்சுகளே!
“உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வது மூளைதான். மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தித் திறன் இருக்க வேண்டும். அதற்கு, கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் பெரும்பாலும் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். நினைவாற்றல் குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், தக்காளி, காரட், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, பாதாம்பரும்பு, பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளைப் பட்டியலிட்டு சாப்பிடலாம்.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும், ஆர்வமும் மிகச் சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் மனோதத்துவப் பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவு.
மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை களைச் சாப்பிடுவது மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல் படுத்தும் என்கிறார் மருத்துவத் துறை பேராசிரியர் வில்லியம் கான்னர். தேர்வு எழுதும் மாணவர்கள் அவசியம் இதைக் கருத்தில் கொள்ளுங்கள்.