மன்னிச்சூ…
நவம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 9 முதல் பத்தியில் அரியனை என்பது அரியணை என்றும், 12ஆம் பக்கத்தில் 2ஆம் வரியில் உறக்கத்திலிந்து என்பது உறக்கத்திலிருந்து என்றும் அதேபோல் பக்கம் 29இல், காலம் 2இல், முதல் பெட்டியின் 4ஆவது வரியில் என்னும்போதெல்லாம் என்பது எண்ணும்போதெல்லாம் என்றும் இருக்க வேண்டும் என்று இலஞ்சி இர.அறிவரசியும், இர.அன்புச்செல்வனும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதே போன்று 5ஆம் பக்கத்தில் 3ஆவது பெட்டியில் முதல் வரியில் எல்லைஷ என்பது எல்லை என்றும் 8ஆம் பக்கத்தில் காலம் 1இல் முதல் பத்தியில் 5ஆம் வரியில் நவராததிரி என்பது நவராத்திரி என்றும் அதே பக்கத்தில் 2ஆம் காலத்தில் முதல் பத்தியில் 5ஆம் வரியில் அதன என்பது அதன் என்றும் பக்கம் 9 முதல் பத்தியில் அரியனை என்பது அரியணை என்றும் இருக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் எஸ்.எம்.அபிநயா சுட்டிக்காட்டியுள்ளார். பிழைகளுக்கு மன்னிச்சூ…! தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
– பொறுப்பாசிரியர், பெரியார் பிஞ்சு
பிஞ்சு வாசகர் மடல்
அக்டோபர் பிஞ்சு செப்டம்பரில் பழுத்து விழுந்தது வானவில் பாடல் அருமை.
வளர்ச்சியை பாதிக்குமா செல்பேசிகள்? ஆய்வுக்குப் பாராட்டுகள்! மந்திரத்தால் மணல் சர்க்கரை ஆகாது!
அம்மம்மா!
முகநக நட்பது நட்பன்று
பெரியார் நட்பே நட்பு!
தங்கள் அன்புள்ள,
– தமிழன்,
தே.கல்லுப்பட்டி, மதுரை
கவிதை
தந்தை பெரியார்
ஈரோடு ஈன்றெடுத்த
தலைவரவர்!
ஈடில்லா தியாகத்தின்
இமயமவர்!
மூடநம்பிக்கை
ஒழித்த முன்னோடி!
முன்னேற்றப் பாதை
காட்டிய கண்ணாடி!
பெண்ணுரிமை பெற
பெரிதும் உழைத்தார்!
தள்ளாத வயதிலும்
தமிழ்நாடெங்கும்
சென்று களைத்தார்!
கோயிலுக்குள் சமஉரிமை
வேண்டும் என்றார்!
போராட்டக் களத்தில்
இறுதிவரை நின்றார்!
சுயமரியாதைத் திருமணத்தை
சட்டமாக்கச் செய்தார்!
திராவிடக் கொள்கைகளால்
தமிழர் மனத்தை நெய்தார்!
நலிவடைந்த சமுதாயத்தை
பொலிவுபெறச் செய்தார்!
என்று பெரியாரை
நினைத்திடுவோம்!
அவர்தம் கொள்கை வெற்றிபெற நாளும் உழைத்திடுவோம்!
– அ.உதயபாரதி, கெருகம்பாக்கம்