அழகிய பென்சில் கிரீடம்
செய்து அசத்துவோம்
வாசன்
தேவையான பொருட்கள்:
1. பென்சில், 2. ஸ்கெட்ச் பென்(கருப்பு), 3.அளவுகோல், 4.கத்தரிக்கோல், 5.பசை, 6.தாள் வெட்டுக்கத்தி, 7.பச்சை நிறத் தாள்.
செய்முறை:
1. 8 செ.மீ. நீளமும், 7 செ.மீ அகலமும் கொண்ட சிறிது தடிமனான காகிதத்தை எடுத்து, படம் 1இல் காட்டியுள்ளதைப் போல அளவுகளில் கோடுகளை வரைந்து கொள்ளவும்.
2. அடுத்து படம் 2இல் காட்டியுள்ளதைப் போல ஸ்கெட்ச் பென்னால் உருவத்தை வரைந்து-கொள்ளவும்.
3. பிறகு வரைந்த படத்தின் காதுப் பகுதியை தாள் வெட்டுக்கத்தியின் உதவியோடு வெட்டிவிட்டுக் கொள்ளவும்.
4. பின்பு படம் 4இல் காட்டியுள்ளதைப் போல மேல்புறத்தில் கோடுகளை வரைந்துகொள்ளவும்.
5. அடுத்ததாக படம் 5இல் காட்டியுள்ளதைப் போல கத்தரியின் உதவியோடு கோடுகளை வெட்டிவிட்டுக் கொள்ளவும்.
6. படம் 6இல் காட்டியுள்ளபடி வெட்டிவிட்ட பாகத்தின் மீது பென்சிலை வைத்து அதை சுருட்டி விட்டுக்கொள்ளவும்.
7. பின்பு அதை எடுத்து பென்சிலின் மேல்புறத்தில் பசையின் உதவியோடு ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது (காதுப் பகுதி தனியாக வெளிப்புறமாகத் தெரியும்படி) மேல்புறமாக வெட்டிவிட்ட பாகத்தைப் பிரித்து விட்டுக்கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் பென்சிலுக்கு அருமையான கிரீடம் தயார்.