குதிக்கும் டால்பின்
செய்து அசத்துவோம்
வாசன்
1. 3X5 இன்ச் அளவுள்ள இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு இரண்டையும் பசை தடவி ஒட்டிக் கொள்ளவும்.
2. பிறகு படம் 1, 2இல் உள்ளது போல முன்புறம் ஒரு டால்பினையும், பின்புறம் ஒரு நீள்வட்ட வளையத்தையும் வரைந்துகொள்ளவும்.
3. படம் 3இல் உள்ளதுபோல அட்டையில் இடது, வலது பக்க ஓரங்களில் சிறு துளைகள் போட்டு அதில் சிறிதளவு தடிமனான நூலை தனித்தனியாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
4. படம் 4இல் உள்ளதுபோல முடிச்சை நடுவிரல்களில் மாட்டிக் கொண்டு பெருவிரல், சுட்டு விரலால் அட்டையை முடிந்தவரை முறுக்கவும்.
5. முறுக்கிய பிறகு படம் 5இல் உள்ளதுபோல இடது, வலதுபுறமாக இழுக்கவும். இப்போது அட்டை சுற்றத் தொடங்கும். இதனால் டால்பின் நீள்வட்ட வளையத்தில் வழியே குதிப்பது போல தெரியும்.
இது பார்க்க பரவசமூட்டுவதாக இருக்கும்.
செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!