செய்து அசத்துவோம்
தீப்பெட்டிப் படகு
வாசன்
தேவையான பொருட்கள்:
ஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்றும் தண்ணீர் நிரப்பிய அகலமான பாத்திரம்.
செய்முறை:
1. படம் 1இல் காட்டியுள்ளது போல தீப்பெட்டியின் இருபுறமும் தீக்குச்சிகளை சொருகவும்.
2. படம் 2இல் உள்ளதுபோல இரண்டு குச்சிகளுக்கும் இடையே ரப்பர் பேண்டை மாட்டவும்.
3. படம் 3இல் உள்ளதுபோல ரப்பர் பேண்களுக்கு நடுவே சிறிய மரத்துண்டை சொருகவும். (இந்த மரத்துண்டுதான் நமது படகின் துடுப்பு).
4. படம் 4இல் உள்ளதுபோல மரத்துண்டை முறுக்கிக் கொள்ளவும்.
5. படம் 5இல் உள்ளதுபோல நீரில் அந்தத் தீப்பெட்டியை வைத்து முறுக்கியுள்ள மரத்துண்டை விட்டுவிடவும். இப்போது மரத்துண்டு சுற்றத் தொடங்கும். அப்போது தீப்பெட்டி படகு போல நகரும்.
பார்ப்பதற்கு விசைப்படகு செல்வதுபோல தோன்றும்.
மகிழ்ச்சி தானே பிஞ்சுகளே!
செய்து அசத்துங்கள்.